இதை தெரிஞ்சிக்கோங்க..! 6 மாத குழந்தைக்கு பழங்கள் அவசியம்.. எந்த பழங்கள் கொடுக்கலாம் ?
6 மாதம் ஆன பிறகு, குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் எடுத்த உடன் கனமான உணவுகளை கொடுக்கக்கூடாது. அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக குடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படும். இது குழந்தைகளுக்கு செரிமான கோளாறு, மலச்சிக்கல், வயிற்று போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.இது போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, காய்கறிகள் மற்றும் பழங்களை பழக்க வேண்டும். அதுவும் எல்லா பழங்களையும் கொடுக்கக்கூடாது. இதுவும் ஆபத்துதாம். 6 மாத குழந்தைக்கு என்ன பழங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு புதிய உணவு தான் தரலாம். வீட்டில் சமைக்கும் அனைத்து வகை உணவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக பழக்கப்படுத்தலாம். புது உணவுகளை ஆரம்பிக்கும்பொழுது அதில் உப்பு, இனிப்பு, காரம் போன்ற எதையும் சேர்க்கத்தேவையில்லை.பெரும்பாலும் இனிப்பு சேர்க்கப்படுவதால் பல குழந்தைகள் இனிப்பு சுவைக்கு அடிமையாகின்றன. இதை தவிர்க்க இணை உணவு ஆரம்பிக்கும் காலகட்டத்தில் அந்த உணவின் ஒரிஜினல் சுவையோடு கொடுப்பதே நன்மை பயக்கும். மசித்த காய்கறிகள், கீரைகளும் குழந்தையின் ஏழாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.
குழந்தையின் முதல் உணவில் அவசியம் ஆப்பிளை சேருங்கள். ஏனெனில் இது நார்ச்சத்து மற்றும் இனிப்பு சுவையுடன் நிறைந்திருப்பதால் இதை குழந்தை அதிகமாகவே விரும்ப தொடங்கும். ஆப்பிளை கொண்டு ப்யூரியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.ஆப்பிளை தோல் சீவி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதை தோல் நீக்கி ஆவியில் வேக வைக்கவும். பிறகு இதை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் பால், சர்க்கரை என எதுவுமே சேர்க்காமல் அப்படியே குழந்தைக்கு கொடுக்கலாம். முதல் முறை இதை கொடுக்கும் போது வேறு எந்த பழங்களையும் உடன் சேர்க்க வேண்டாம்.
குழந்தையின் உணவில் சிறந்த பழங்களாக அன்னாசி ப்யூரியை சொல்லலாம். இது வைட்டமின் சி நிறைந்தது. எலும்புகள் மற்றும் தசைகளை வளர்க்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. குழந்தையின் மூளை செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இதில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.அதே நேரம் இதை குழந்தைக்கு கொடுக்கும் போது ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை கவனித்து பிறகு பயன்படுத்துங்கள். அன்னாசிப்பழ ப்யூரியை கொடுத்து 3 நாள் கழித்து பிறகு வேறு பழங்களை கொடுக்க முயற்சிக்கலாம்.
குழந்தைகளுக்கு தாகம் தணிக்கும் பழங்களில் கிவி பழம் ஒன்று. ஊட்டச்சத்துகளின் நிறைவாக இருப்பதால் இதை தவிர்க்க வேண்டாம். குழந்தைக்கு கிவி பழம் தயாரிக்கும் போது மட்டும் சரியானதை தேர்வு செய்யுங்கள்.1 கிவி பழம் ஒன்றை எடுத்து செய்து அதன் தோலை சீவி துண்டுகளாக நறுக்கி கொடுக்கவும். இதை கைகளால் நன்றாக மசித்துவிடவும். இதை அப்படியே குழந்தைக்கு கொடுக்கலாம்.
அம்மாக்கள் பெரும்பாலும் வாழைப்பழத்தை தான் தேர்வு செய்வார்கள். இது குழந்தையின் எடையை அதிகரிக்க செய்வதால் வாழைப்பழத்தை கொடுக்க மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.வாழைப்பழம் நன்றாக கனிந்த பழத்தை எடுத்து தோல் நீக்கி ப்ளெண்டரில் மசித்து அல்லது மிக்ஸியில் கைகளால் கட்டியில்லாமல் குழைத்து குழந்தைக்கு அப்படியே கொடுக்கலாம்.
தர்பூசணி நீரேற்றத்துடன் வைத்திருக்க கூடிய எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பிய பழம். இது கோடைகால பழமாகும். இயற்கையான இனிப்பு என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கோடையில் நீரிழப்பு உண்டாக்காமல் தடுக்கிறது.தர்பூசணி பழத்தை நறுக்கி அதன் விதைகளை நீக்கி கைகளால் அல்லது ப்ளெண்டரில் மசித்து கொடுக்கவும். குழந்தைகள் மறுக்காமல் சப்பு கொட்டி சாப்பிடுவார்கள்.
ஆரோக்கியமான பழமான பப்பாளி பழம் குழந்தைக்கு மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்கும். பப்பாளி ஃபைபர் மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் கொண்டுள்ளது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது.