1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! இரவு தூங்கச் செல்லும்முன் 2 கிராம்பு சாப்பிட்டு சுடுதண்ணீர் குடிச்சா...

1

கிராம்பை அப்படியே வாயில் போட்டு லேசாக சுவைத்து ஈரமாக்கி நன்கு மென்று சிறிது சிறிதாக சலைவாய் வழியே முழுவதுமாக சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து விட்டு தூங்க வேண்டும். இதுதான் கிராம்பு சாப்பிடுவதற்கான மிகச்சிறந்த முறையாகும்.

இரவில் கிராம்பு சாப்பிடுவதன் பயன்கள்

இரவில் தூங்கச் செல்லும்முன் கிராம்பு சாப்பிடுவதால் அசிடிட்டி, டயேரியா, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீருவதோடு ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவி செய்யும்.

இதிலுள்ள ஒருவகை சாலிசிலேட், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் பருக்கள் வராமல் தடுக்க உதவி செய்யும்.

பல் வலி மற்றும் பற்களில் உள்ள புழுக்கள் வெளியேறுவதற்கு கிராம்பும் கிராம் பு எண்ணெயும் உதவி செய்யும்.

இரவில் கிராம்பு சாப்பிடும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றம் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

தொண்டை வலியைக் குறைக்க உதவி செய்யும்.

கை, கால்களில் உள்ள நரம்புகள் சிலருக்கு இழுப்பு பிடிப்பது போல இருக்கும். அவர்கள் தினமும் தூங்கச் செல்லும்முன் கிராம்பு சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரைக் குடித்து வர சல நாட்களில் இந்த பிரச்சினை தீரும்.

இருமல், சளி, தொண்டையில் ஏற்படும் அழற்சி, வைரஸ் தொற்றுக்கள், சைனஸ், ஆஸ்துமா ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும்.

தினமும் இரவில் கிராம்பு சாப்பிட்டு வந்தால் எவ்வளவு பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றலும் பலமடையும்.

Trending News

Latest News

You May Like