1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! சாப்பிட பின் தூங்கினா உடல் எடை கூடுமா ? கூடாதா ?

1

நம்மில் பலருக்கு  தினசரி மதியானத்தில் உறங்கும் பழக்கம் கொண்டால்  உடல் எடை ஏறி விடுமோ என்ற பயம் இருக்கிறது. 

மதிய நேரத்தில் தூங்குவது உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று ஒரு தரப்பு மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருந்தாலும், ஒரு சிலர் மதியத்தில் தூங்குவது நமது மூளை சிறப்பாக செயல்பட வழிவகை செய்யும் என குறிப்பிடுகின்றனர். மதிய வேளையில், களைப்பாக உணரும் போது 10-15 நிமிடங்கள் உறங்க வேண்டுமாம். அப்படி தூங்குவதால் நாம் விழிப்புடன் இருக்க முடியும் என்றும், அதற்கடுத்து செய்யும் வேலைகளை விரைந்து முடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கவும் உடல் நலன் சிறப்பாகவும் வாய்ப்புகள் உள்ளது. 

பலருக்கும் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்குமோ என்ற பயம் உள்ளது. வீட்டிலும் பெரியவர்கள் தூங்கினால் எடை கூடும் என சொல்வார்கள். ஆனால் இது கட்டுக்கதை என்றால் உங்களால் நாம முடிகிறதா?

உண்மையில் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்காதாம். Archives of Internal Medicine நடத்திய ஆய்வில் அதிக எடைக் கொண்டவர்கள் தினமும் மதியம் 16 நிமிடங்கள் தூங்கி எழுந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்கிறது. அதேபோல் A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் என்கிறது.

அதோடு நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் அதிகம் பசி எடுக்கும் ஹார்மோன்கள் சுரக்குமாம். இதனால் அதிகம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் என்கிறது.

எனவே இரவு நல்ல தூக்கம் இல்லை, சரியாகத் தூங்கவில்லை என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் மதியம் ஓய்வாக சிறிது நேரம் தூங்கி எழுதல் தவறில்லை.

எப்படி தூங்க கூடாது..? 

வயிறு முழுக்க சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக தூங்க கூடாது.  மதியத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாது. அதையும் மீறி அதற்கு மேல் தூங்கினால் அந்த நாளை ஓட்டுவதற்கான ஆற்றலை இழந்து விடுவோம். 1-2 மணி நேரம் தூங்குவதால் அந்த நாள் முழுவதும் சோர்வடைந்து காணப்படுவீர்கள்.

இரவு நேரத்தில் உணவை ஏன் தாமதமாக சாப்பிடக் கூடாது : நீங்கள் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்வதில் உடலுக்கு சில மணிநேரங்கள் தேவை. இந்த அடிப்படையில், பல காலமாக வீட்டிலும் சரி, மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களும் சரி, இரவு நேரத்தில் அதாவது டின்னரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக சாப்பிட்டுவிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். பலரும் அதிகபட்சம் இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டவுடன் நீங்கள் தூங்கும் பொழுது அது செரிமானம் ஆகாமல் தாமதமாகும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழலாம்.

உடல் எடை அதிகரிப்பதற்கு தாமதமாக டின்னர் சாப்பிடுவது தான் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அல்லது லேட் நைட் டின்னர் பழக்கமாக கொண்டிருப்பது ஆகிய அனைத்துமே உடல் எடை அதிகரிப்பதற்கும் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த எண்ணம் தவறானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களை பாதிப்பதை விட, நீங்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பது தான் உங்களை அதிகமாக பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.

உதாரணமாக இரவு 8 மணிக்கு மேல் அல்லது அதற்கும் தாமதமாக இரவு உணவை சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது இயற்கையாகவே எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே இரவு நேரத்தில் தாமதமாக உணவு சாப்பிடுவார்கள், வழக்கத்தை விட அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.

எந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பதை விட நீங்கள் சாப்பிடும் உணவுகளில்தான் கவனம் தேவை. பெரும்பாலும், சாக்லேட் ஐஸ்க்ரீம், இன்ஸ்டன்ட் உணவுகள், பொறித்த உணவுகள், போன்ற கம்ஃபர்ட் ஃபுட் அல்லது ஜங்க் ஃபுட் இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.இந்த உணவுகள் பெரும்பாலும் அதிக கலோரிகள் கொண்டவை. எனவே நீங்கள் இதை சாப்பிட்டவுடன் உடலுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் தூங்கி விடுவதால் இவை நேரடியாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டால் கூட என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பிரச்சனைகள் ஏற்படாது. 

Trending News

Latest News

You May Like