1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! அடிக்கடி கை நடுங்குதா? அப்போ இந்த 6 பிரச்சினை உங்க உடம்புல இருக்கலாம்...!

1

கைகள் நடுக்கம் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது பதட்டம் தான். பதட்டம் என்றால் பதட்டம் ஏற்பட்ட பின் மட்டுமே கை நடுக்கம் வருவதில்லை.

பதட்டத்தைத் தூண்டும் பயம், மனச்சோர்வு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் உடலில் அட்ரீனலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்கச் செய்துவிடும்.

இது நாம் நீண்ட காலமாக காமெடியாக சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் தான். 6 மணிக்கு மேல ஆகியிடுக்கு சரக்கு இல்லைனா கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு என்று சொல்லக் கேட்டிருப்போம்.இது காமெடியெல்லாம் கிடையாது. உண்மை தான் ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை இல்லாமல் ஆல்கஹால் தொடர்ச்சியாாக எடுத்துக் கொண்டிருக்கும் நபருக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளாமல் போகும்போது இந்த கை நடுக்கப் பிரச்சினை உண்டாகிறது.

ரத்த சர்க்கரை அளவு அதிகமானால் உடலில் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று நமக்குத் தெரியும். அதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்வோம்.அதேபோல நம்முடைய உடலுக்குத் தேவையான அளவை விடக் குறைவாக ரத்தத்தில் சர்க்கரை இருப்பதும் ஆபத்து தான். அதில் ஒன்று தான் இந்த கை நடுக்கம்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கை நடுக்கம் ஏற்படும்.

நம்முடைய தைராய்டு ஹார்மோன் தேவைக்கு அதிகமாக சுரக்கும் நிலையை தான் ஹைபர் தைராய்டிசம் என்று சொல்லுவோம்.இந்த ஹைபர் தைராய்டிசம் பிரச்சினை உள்ளவர்களுக்கு கைகள் மற்றும் விரல்களில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு கை நடுக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

நம்முடைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகள் பல்வேறு நரம்புக் கோளாறுகள் மற்றும் ரத்த ஓட்டப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.இந்த நரம்பியல் கோளாறுகளும் கை நடுக்கத்துக்கும் அதிக தொடர்பு இருப்பதாக மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

வயது முதிர்ச்சியின் காரணமாக அல்சைமர், பர்கின்சன் உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும்.இந்த பர்கின்சன் நோய் ஏற்படும்போது ஏற்படுகிற எலும்பு மற்றும் நரம்பு வலிமை குறைவதும் கை நடுக்கத்திற்கு காரணமாக அமையும்.

Trending News

Latest News

You May Like