1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! இந்த வெங்காயத்தை சாப்பிடலாமா ? கூடாதா..?

1

எந்த விதமான சமையல் செய்தாலும் பிரதானமான பொருள் வெங்காயம் தான். வெங்காயம் இல்லாமல் எதையுமே தாளிக்க முடியாது. குழம்பாகட்டும், காய்கறி ஆகட்டும், ரசமாகட்டும் அல்லது பிரியாணி என எது செய்தாலும் அதில் வெங்காயம் அவசியம் ஆகும்.

வெங்காயத்தை உரிக்கும் போது சில வெங்காயங்களிலன் மேற்புறத்திலேயே கருப்பு நிறங்களில் அச்சு போன்று ஏதோ இருப்பதை பார்த்திருப்போம். அது பூஞ்சை. குறிப்பாக இப்போது வரும் வெங்காயங்களில் இது அதிகப்படியாக இருக்கும். மழைக்காலங்களிலேயே இது பெரும்பாலும் அதிகம் காணப்படும். பலருக்கும் இப்படி இருக்கும் வெங்காயத்தை வாங்கலாமா? வேண்டாமா? தெரியாமல் வாங்கிவிட்டால் அதை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா? என்றெல்லாம் பல குழப்பங்கள் இருக்கும். 

வெங்காயத் தோலை உறிக்கும்போது கருப்பு அச்சு இருந்தால், அப்படிப்பட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டால் மியூகோர்மைகோசிஸ் வருமா என்கிற பயமும் பலருக்கு உண்டு.

பொதுவாக வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. அதுதான் வெங்காயத்திலும் வருகிறது. இந்த கருப்பு அச்சு இது மியூகோர்மைகோசிஸ் அல்ல. ஆனால் இந்த கருப்பு அச்சு ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்றாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கெனவே அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது காற்றில் பறந்து அதை நுகரும்போது பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அப்படி கருப்பு அச்சு இருக்கும் லேயரை மட்டும் உறித்து எடுத்த பின் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் வெங்காய லேயரில் அந்த கருப்பு அச்சு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தலாமா? கூடாதா?

கருப்பு நிற அச்சு உள்ள வெங்காயத்தில் அதன் மேல் தோலையும் உட்புறத்தில் உள்ள ஒரு லேயர் வெங்காயத்தையும் உரித்து விட்டு நன்கு கழுவிவிட்டு பின்பு சமைக்கலாம். ஆனால் அத்தகைய வெங்காயத்தை சமைக்காது பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைக்கிறவர்களாக இருந்தால் அந்த கருப்பு அச்சை நீக்கிவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து விஷமாக மாறவும் வாய்ப்பு உண்டு.

Trending News

Latest News

You May Like