1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிக்கலாமா?

11

கொதித்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, 2 தக்காளிகளைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். பிறகு, அதனைக் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டால் அதன் தோல் தனியாக வந்துவிடும். தோலை எடுத்துவிட்டு, தக்காளியை மட்டும் மிக்ஸியில் அரைத்து, சிறிது மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து பருகலாம்.

பலன்கள்: தினமும் பருகி வந்தால் சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளி தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கும். தக்காளியில் உள்ள 'லைகோபென்’ என்னும் இயற்கை நிறமி, நம் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. சருமத்தின் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் 'ப்ரோ கொலோஜென்’ என்ற மூலக்கூறின் சதவிகிதமும் அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள 'மைட்டோகான்ட்ரியல் டி.என்.ஏ’வை தக்காளி பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தில் சுருக்கம் விழுவதையும் குறைக்கிறது. வைட்டமின்கள் அடங்கிய தக்காளி ஜூஸ் உடலின் நச்சுத் தன்மையைக் கடுமையாகக் குறைத்துவிடும். 

மேலும் தினமும் 1 கிளாஸ் தக்காளி சாறு குடிப்பதால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.நன்கு பழுத்த சில தக்காளி பழங்களின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பழங்களை அரிந்து, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும்,  தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிக்கலாமா? நிச்சியமாக குடிக்கலாம். இதனால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான அமைப்பு போன்றவை பலமாகின்றன. தினமும் காலையில் எழுந்ததும் தக்காளி ஜூஸ் பருகினால், உங்கள் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.

தக்காளியை சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிப்பதால், அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்குமளவிற்கு உங்களுக்கு சத்துகள் இதில் கிடைக்கிறது.

உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்தினால் போதும். ஏனென்றால் தக்காளி சாற்றில் மிகுந்த குறைவான  கலோரிகள் தான் உள்ளது.

காலையில் தக்காளி ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான பொட்டாஸியம் கிடைக்கிறது. இதன் காரணமாக உங்கள் உடலின் ரத்த அழுத்தம் சீராகிறது.தக்காளியில் அண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் நோய் வராமல் தடுக்கவும் அண்டி ஆக்ஸிடெண்ட் உதவுகிறது. மேலும் இவை உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

தக்காளி சாறு அருந்தினால் உடல் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுப் பொருட்களை போக்கும். மேலும் இது கல்லீரல், பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க  உதவுகிறது.

வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிப்பதால், உங்கள் உடலுக்கு தேவையான ஆண்டி ஆக்ஸிடெண்ட் கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பிற்கும் உதவியாக இருக்கிறது. இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிகளவில் இருப்பதால், உங்கள் செரிமான அமைப்பு ஒழுங்காக செயல்பட இந்த ஜூஸ் உதவி செய்கிறது. காலையில் தக்காளி ஜூஸ் குடித்தால் உங்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது. செரிமான அமைப்பிற்கு முக்கியமக தேவைப்படும் விட்டமின் ஏ, சி மற்றும் கே அகியவை தக்காளியில் நிறைய உள்ளன.

தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் பதினெட்டு சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என  கூறப்படுகிறது.

தக்காளி சாறு குடிப்பது எடையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும். ஒரு ஆய்வின்படி தக்காளி சாறு அழற்சி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. உடல் பருமன், அதிக கொழுப்பு, அதிக தசை மற்றும் இடுப்பு சுற்றளவு அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய தக்காளி சாறு உதவுகிறது. எனவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க இது உதவுகிறது.

இதயம் என்பது நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. இந்த இதயத்தை பாதுக்காக்க இந்த தக்காளி சாறு மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. அவை இதயத்திற்கு ஆரோக்கியதை தருகின்றன. ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தக்காளி  சாறு குடிப்பது மிகவும் நல்லது.

தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைந்து தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும்  உண்டாகும்.

Trending News

Latest News

You May Like