இதை தெரிஞ்சிக்கோங்க..! சிறுநீரகக் கற்கள் பிரச்சனை கொண்டவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடலாமா ?
50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3% கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ்-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது. மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. அதேபோன்று நார்ச் சத்துகளும் கால்சியமும் அதிக அளவு உண்டு. அத்திப்பழத்தை சாறாக்கி குடித்தாலும் உலர வைத்துச் சாப்பிட்டாலும் இதிலிருக்கும் சத்துக்களின் அளவு குறைவதில்லை. அத்திப் பூக்களோடு அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருத்துவக்குணங்களைக் கொண்டது.
அத்திபழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். காய்ந்த அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.
நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலுசேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோயை தடுக்கிறது.
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3 வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து நிறைந்த அத்திப்பழத்தால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும். கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிகளும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் செரிமானப் பிரச்சினைகள் இல்லாமல், குடல்களின் இயக்கம் சீராக இருந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான நார்ச்சத்துகளை மூன்றே மூன்று உலர்ந்த அத்திப்பழங்கள் கொடுத்துவிடுகின்றன. உடலில் செரிமானத்தைத் தூண்டும் சக்தி அத்திப் பழத்துக்கு உண்டு. நீண்டகாலமாகத் தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சினைகளில் அவதிப்படுபவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத அற்புத மருந்து உலர் அத்திப்பழம். கடுமையான ரத்த மூலம் இருப்பவர்கள், அத்திப்பிஞ்சுகள் கொண்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கப் பெறலாம்.
சிறு குடல் பெருங்குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுகளால் சிலருக்கு புற்று நோய் ஏற்படுகிற அபாயமும் உண்டு. குடலில் தங்கியிருக்கும் நச்சுகளை நீக்கி, குடலை சுத்தமாக்குவதோடு உடலில் புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தரமான ஆன்ட்டி-ஆக்சிடன்ட் சத்துகளையும் அதிகம் கொண்டிருக்கிறது அத்திப் பழம்.
சோடிய உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் உப்பு குறைந்தும் இருக்கிற வேளையில்தான் ரத்த அழுத்தம் அதாவது பிளட் பிரஷர் ஏற்படுகிறது. உலர் அத்திப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் சோடியம் அளவு குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. தினமும் உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை நெருங்கவே நெருங்காது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்திப்பழ மரத்தின் இலைகளில் கூட நார்ச்சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ இலைகளை உட்கொள்வதால், இன்சுலின் சுரப்பதை சீராக வைத்துக் கொள்ளலாம்.
அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும். ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி செய்து மூலநோயில் இருந்து காக்கிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களோ, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையோ கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது நல்லது