1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! 1 வயது குழந்தைக்கு தர்பூசணி பழம் கொடுக்கலாமா ?

1

ஒருவயதுக்கு பிறகு குழந்தைக்கு பழச்சாறு, ஸ்மூத்தி போன்றவற்றை கொடுக்காமல் பழங்களாக நறுக்கி கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்கு பிறகான குழந்தைக்கு கோடையில் பழங்களை கொடுத்து பழக்கலாம்.குளுமை ஆயிற்றே குழந்தைக்கு சளி பிடிக்காதா என்று சந்தேகம் கொள்ளும் அம்மாக்கள் கோடையில் இந்த பழங்களை பழகுங்கள். என்னென்ன பழங்களை குழந்தைக்கு கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கலாம்.

கோடைக்கு ஏற்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் முதன்மையானது முக்கியமானது தர்பூசணி.தர்பூசணியை கொட்டையில்லாமல் சிறிய துண்டுகளாக நறுக்கி  சிறிய கப்பில் போட்டு கொடுத்துவிடுங்கள்.

தர்பூசணியை மென்று சாப்பிடவேண்டியதில்லை. வாயில் இலெசாக அசைத்தாலே அவை கரைந்து காணாமல் போகும்.அதில் மேற்கொண்டு இனிப்பு சேர்க்க வேண்டாம். கொட்டையை நீக்கி கொடுங்கள். இல்லையெனில் தொண்டையில் சிக்கி கொள்ளும். தினமும் நண்பகல் இரண்டு மணிக்குள் ஒரு முறை மட்டும் கொடுத்து பழக்குங்கள்.

மாம்பழத்தின் சுவையை நிச்சயம் குழந்தைகள் விரும்புவார்கள். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த மாம்பழங்கள் நிச்சயம் குழந்தைக்கு தேவை. வெகு ருசியோடு இருக்கும் மாம்பழங்களை குழந்தைகள் விரும்புவார்கள்.மாம்பழத்தை சுத்தமாக ஓடும் நீரில் கழுவி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கவும். 10 சிறு துண்டுகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம். பழம் நன்றாக பழுத்திருக்க வேண்டும்.முதல் முறை மாம்பழம் கொடுக்கும் போது குழந்தைக்கு வயிற்றுபோக்கு உண்டாகலாம். பயப்பட வேண்டியதில்லை, பழக பழக சரியாகிவிடும். தினமும் கொடுக்க வேண்டாம். முதலில் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும் கொடுங்கள். பிறகு மூன்று நாட்கள். தினமும் வேண்டாம்.

கோடைக்கு கண்டிப்பாக குழந்தைக்கு சேர்க்க வேண்டியவை வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயை தோல் நீக்கி ஓடும் நீரில் கழுவி பிறகு அதை வட்டத்தில் நான்காக நறுக்கி 10 துண்டுகள் வரை கொடுக்கலாம். இப்படி கொடுத்தால் குழந்தைக்க் செரிமானம் உடனே ஆகும். மலச்சிக்கல் இருக்காது. கோடையில் நீர்ச்சத்து பற்றாக்குறையாக இருக்காது. வெள்ளரியில் இருக்கும் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து குழந்தைக்கு வயிற்றை ஆரோக்கியமாக நிரப்புவதில் முக்கியமானது.தினமும் ஓரு வேளை இதை கொடுக்கலாம். வெள்ளரிக்காயை விட வெள்ளரி பிஞ்சுகளை கொடுக்கலாம். முதலில் கொடுத்த பிறகு குழந்தைக்கு சளி, குளுமை வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். பிறகு தினமும் கொடுத்து பழக்கலாம்.

பப்பாளிப்பழங்கள் போன்று எளிமையான சத்து கொடுக்ககூடிய பழம் எதுவும் இல்லை. மலச்சிக்கலை போக்கி செரிமானத்துக்கு துணைபுரியும் பப்பாளி பழத்தை குழந்தைக்கு கொடுக்க சரியான நேரம் இது. குழந்தைக்கு பப்பாளி பழம் கொடுக்கும் போது ஹைப்ரேட் பழங்களாக இல்லாமல் நாட்டுப்பழங்களாக கொடுக்க வேண்டும்.பப்பாளி நோய் எதிர்ப்புசக்தியை கொடுக்ககூடியது. குழந்தைக்கு சளி மற்றும் இருமல் வராமல் தடுக்ககூடியது. நன்றாக பழுத்த பப்பாளிப்பழத்தின் சிறுதுண்டு போதுமானது.

Trending News

Latest News

You May Like