இதை தெரிஞ்சிக்கோங்க..! விரதத்திற்கு பிறகும் உடற்பயிற்சிக்கு பிறகு ஜவ்வரிசி சாப்பிடலாமா..?
ஜவ்வரிசி மாவுச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இதன் மூலம் எளிதில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
ஜவ்வரிசியில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இரத்த நாளங்கள் வழியாக ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, இதையொட்டி, இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது மற்றும் இதயத்தில் உள்ள சிரமத்தை குறைகிறது.
ஜவ்வரிசி தசை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லது உடல் வலிமை பெறவும் உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஜவ்வரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இது செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது.
ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
ஜவ்வரிசியில் மாவுச்சத்து மற்றும் எளிய சர்க்கரைகளால் நிறைந்துள்ளது, அவை உடலில் எளிதில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அளவு குளுகோஸை உருவாக்குகிறது. விரதத்திற்கு பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடலை அதிக ஆற்றலுடன் வைத்திருக்கிறது மற்றும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவற்றைத் தடுக்கிறது.
அல்சர் குணமாக :
ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை அல்சர் என்கின்றனர் மருத்துவர்கள். தினந்தோறும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் போன்றவர்களுக்கு அல்சர் பாதிப்பு சுலபத்தில் ஏற்படுகிறது. இத்தகைய அல்சர் புண்களை ஆற்றுவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது. ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட எந்த ஒரு உணவும் வகையையும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அவை குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடற்சுவற்றில் வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குகிறது.
ஊட்டச்சத்து உணவு
ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கிறது. குறிப்பாக விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இழந்த சத்துக்களை விரைவில் ஈடு செய்து, தசைகளுக்கு வலிமையைத் தருகிறது. உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
ரத்த சோகை நீங்க
நமது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும் போது அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. இரத்தசோகை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த உணவாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் காக்க முடியும்.
பற்கள் வலுவடைய
நமது உடல்நலத்தில் வாயிலிருக்கும் பற்களும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமே உணவுப்பொருட்கள் வேகமாக செரிமானம் ஆகின்றன. அந்த உணவுகளை நன்றாக அரைத்து சாப்பிட பற்கள் வலுவாக இருப்பது அவசியம். ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் அதிக அளவில் சேர்ந்து அவை இரண்டையும் பலப்படுத்துகிறது. பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது.
உறுதியான எலும்புகளுக்கு
மனிதர்களின் எலும்புகளுக்குள்ளாக காரைகள் அதிகம் இருக்கின்றன. இந்த காரைகள் வலுப்பெற்றிருக்கும் போது மனித எலும்புகள் சுலபத்தில் உடைவதில்லை. ஆனால் வயதாகும் காலத்தில் வலிமையாக இருக்கும் எலும்பு காரைக்கள் தேய்ந்து விடுகின்றன. ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமிருக்கிறது. இந்த ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்குள்ளாக இருக்கும் காரைகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இதயம் சீராக இயங்க
நமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஜவ்வரிசியில் புரத சத்து அதிகமுள்ளது. இந்த ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
நீரிழிவு நோய் கட்டுப்பட
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிகக் கொடுமையான வியாதிகளில் நீரிழிவு வியாதியும் ஒன்று. இந்த பாதிப்பிற்குள்ளான அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உயராமலும் அதே நேரத்தில் அதிக அதிகம் குறையாமலும் சரியான அளவில் காக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஜவ்வரிசியில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரிசமமாக வைத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு தங்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் காக்கப்படுகிறது.
ரத்த அழுத்த பிரச்சனை தீர
35 வயதை அடைந்த ஆண்கள், பெண்களில் பலருக்கும் ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகிறது. இந்த ரத்த அழுத்தத்தை சரி வர கவனிக்காவிட்டால் பக்கவாதம், மூளை வாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஜவ்வரிசியில் சிறிதளவு பொட்டாசியம் சத்து இருக்கிறது. இந்த பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை தளர்த்தி, அதிக ரத்த அழுத்தத்தை வெகுவிரைவில் சமமான அளவிற்கு கொண்டு வருகிறது. இந்த ரத்த அழுத்தத்தால் இதயத் தசைகளில் ஏற்படும் மிகுதியான அழுத்தத்தையும் குறைக்கிறது.