இதை தெரிஞ்சிக்கோங்க..! மீன் சாப்பிடுவதால் இவ்வளவு விஷயம் நடக்குமா ?
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது.
மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச் சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர் ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிசெய்கிறது.
மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்ப தால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு களைக் குறைக்கிறது. மேலு ம் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்ப தோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைசெய்கிறது.
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோ ய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையி லும் குறைக்கிறது.
மீன்களில் அடங்கியுள்ள கால்சி யம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷி யம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதி கரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச் சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோ டினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிக ரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும்வயோதிகர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது.
தொடர்ந்து மீன் உண்ணும் பழக்க மானது எலும்புத் தேய்வு, சொரி சிர ங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற் படும் நோய்கள்போன்றவற்றைக் குறைக்க வழி செய்கிறது.
இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்கு மளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கி ன்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.
மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் :-
+++++++++++++++++++++++++++++++++
மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள்.இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது?
பொதுவாக, 'நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ''ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் 'ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான்.