1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா? என்ன பழம் சிறந்தது..?

1

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட சொல்ல பிரதான காரணமே இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுதான்... இந்த பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடும்போது, ரத்த அழுத்தத்தை குறைக்க பேருதவி புரிகிறது.. பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயங்களையும் குறைக்கிறது.

வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் மிகவும் குறைவாகும்.. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு இந்த வாழைப்பழமாகும்.. இதனால், பசியும் கட்டுப்படும், மேற்கொண்டு அதிக உணவையும் சாப்பிடாமல் தடுத்துவிடும்..

எல்லாவகையான பழங்களிலும் சர்க்கரைச்சத்து இருக்கும்போது, வாழைப்பழங்களில் இது சற்று அதிகமாகவே உள்ளது.. அதனால்தான், பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்துவிட சொல்கிறார்கள். அதேசமயம், மஞ்சள் வாழைப்பழங்களையும் சாப்பிடலாம், ஆனால், வாரத்துக்கு 2 சிறிய பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்..

பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்கிறார்கள்.. அதாவது, பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள்.இந்த பழத்தில், ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை தாமதாமாக்குவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன..

அதுமட்டுமல்ல, பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மேலும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம். பழுத்த வாழைப்பழங்களை விட பழுக்காத வாழைப்பழங்களில் குறைவான சர்க்கரையும், அதிக ஸ்டார்ச் எதிர்ப்புத் திறன் உள்ளது..

செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்கிறார்கள். காரணம், இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளன.. நேந்திரம் பழங்களிலும் நார்ச்சத்து நிறைய உள்ளது. எனினும், வாரம் 1 அல்லது 2 சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம். அதுவும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொண்டால் கூடுதல் ஆரோக்கியம் தழைக்கும்.

எனினும், சர்க்கரை நோயாளிகள், சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்று எடுத்து கொள்ளலாம்.. இதுவே பப்பாளியை எடுத்துக்கொண்டால், முற்றிலும் பழுக்காத, செங்காயாக உள்ள பப்பாளியை, 2 அல்லது 3 துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்..அதுவும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட பழங்களை எடுத்து கொள்ள முடியுமாம்.

Trending News

Latest News

You May Like