அச்சுறுத்தும் ஹீமோகுளோபின் குறைபாடு...உங்களுக்கும் இருக்கலாம்….!
நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, இதய நோய் என்று மாதம் ஒரு தொகையை ஒதுக்கி பரிசோதனை செய்கிறோம் ஆனால் இவற்றிலும் முக்கியமானது ஹீமோகுளோபின் குறைபாட்டை தெரிந்துகொள்வது.

நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, இதய நோய் என்று மாதம் ஒரு தொகையை ஒதுக்கி பரிசோதனை செய்கிறோம் ஆனால் இவற்றிலும் முக்கியமானது ஹீமோகுளோபின் குறைபாட்டை தெரிந்துகொள்வது.
டாக்டரிடம் உடல்நலக்குறைபாடு என்று சென்றால் கண் இரப்பையைக் கீழே இறக்கி பார்த்து இரத்தமே இல்லையே என்பார். சத்து டானிக்குகளை தவறாமல் கொடுப்பார், இரத்தத்தின் அளவு குறைய குறைய உடலில் பாதிப் புகள் அதிகரிக்கும்.உதாரணத்துக்கு அதிக உடல்சோர்வு, அயர்ச்சி, தூக்கம், உட லில் வலுவின்மை, வெளிறிய சருமம், பசியின்மை,மூட்டுவலி போன்ற அறிகுறி கள் தொடந்து இருந்தால் அருகில் இருக்கும் லேப்களில் ஹீமோகுளொபின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஆண்களுக்கு 14-18 மி.கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 மி.கிராம் அளவிலும் ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். ஒன்று இரண்டு எண்ணிக்கையில் குறைபாடு இருந்தால் பரவாயில்லை. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக் கையான அளவு இருந்தால் உயிரை பறித்துவிடும் அபாயமும் உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் இன்று 40 சதவீதத்திற்கும் மேற் பட்ட மக்கள் ஹீமோகுளோபின் பற்றாக்குறையோடு அது தெரியாமல் இருக் கிறார்கள். ஹீமோகுளோபின் அவ்வளவு முக்கியமானதா என்று கேட்கலாம்.
நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதம். ஹீமோகுளோபின் தான் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் முழு வதும் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்கிறது. நாம் சுறுசுறுப்போடு ஆரோக்யமாக இயங்க நமது உடலில் இதன் அளவு சரியாக இருக்க வேண்டும். பெண் களே அதிக சதவீதத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டை கொண்டிருக் கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. மாதவிடாயின் போது வெளியேறூம் அதிகப்படியான இரத்தம், அடிக்கடி கருச்சிதைவு, மெனோபாஸ் காலங்களில் இரத்தம் வெளியேறூம் போது அதற்கு ஈடான உணவை எடுத்துக்கொள்ள தவறிவிடுவதுதான் இதற்கு காரணம்.
ஹீமோகுளோபின் குறைபாடு உங்களுக்கும் கூட இருக்கலாம். ஆனால் இக்குறைபாட்டை சத்துமிக்க உணவு, பழங்கள், காய்கறிகள் மூலமே நீக்கிவிட லாம்.
உலர் பழங்களில் உயர் வகை பேரீச்சம்பழங்கள், கறுப்பு உலர் திராட்சையும், உலர் அத்திப்பழமும் க|ணிசமாக ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகின்றன. அதே நேரம் இவை பட்ஜெட்டிற்குள் அடங்குவதுமில்லை. ஆனால் இவற்றிலும் சத்துக்கள் நிறைந்த விலை குறைந்தவையும் உண்டு. நெல்லிக்கனி, பீட்ரூட், பசுமையான கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, எலு மிச்சைச்சாறு, பால், மாதுளை,ஆப்பிள், கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்று அன்றாட உணவு வகைகளில் இருந்தாலே போதுமானது. அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் இறைச்சி வகைகள், முட்டை எடுத்து கொள்ள லாம்.
குறைபாடு இருக்குமோ என்று பதறவேண்டாம். ஆனால் எளிமையான பரிசோதனையின் மூலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்துகொண்டால் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து முன்கூட்டியே காத்துகொள்ளலாம்.
newstm.in