1. Home
  2. ஆரோக்கியம்

உஷாரய்யா உஷாரு.. உணவு பொருள் உஷாரு...

உஷாரய்யா உஷாரு.. உணவு பொருள் உஷாரு...

கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண் டும். எத்தைக் கண்டால் பித்தம் தெளியும் என்று நாம் ஒருபுறம் நோயுடன் ஓடிக்கொண்டிருக்க சத்தமில்லாமல் சந்தடியில் உணவுபொருளில் கலப்படம் செய்துவருகிறது ஒரு கூட்டம். தரமான உணவு பொருள் வாங்க வேண்டும் என்பது போய் கலப்படமில்லாத உணவு பொருளா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.ஆரோக்யமாய் வாழ வேண்டும் என்பது மட்டும் முக்கியமல்ல. நாம் உபயோகிக்கும் உணவு பொருள் எல் லாமே ஆரோக்யத்தைச் சிதைக்காமல் காக்கிறதா என்று கவனிப்பதும் முக்கியம்.

என்னென்ன பொருள்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என்பதைசற்றே கூர்ந்துகவனித்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம். உதாரணத் துக்கு சிலவற்றைக் கொடுத்திருக்கிறோம். பாருங்களேன்…

மிளகு:
நல்ல காரத்தன்மை கொண்டிருக்கும் மிளகின் தோற்றத்தை ஒத்திருக்கிறது பப்பாளி விதை. சிறிய கப்பில் அரைதம்ளர் தண்ணீர் விட்டு மிளகை போட்டால் மிளகு உள்ளே செல்லும். பப்பாளி விதை பல் இளித்தப்படி மேலேயே மிதக்கும்.

கடுகு:
கடுகை எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருந்தால் அது தரமான கடுகு. வெள்ளையாகவோ வேறுமாதிரி நிறத்திலோ இருந்தால் அது கடுகே அல்ல. ஏமாந்தீர்கள்.

பெருங்காயம்:
வாசனை மிக்க பெருங்காயம் உடலில் வாயுவைக் கரைக்கும். ஆனால் பெருங்காயம் கலப்பிடமில்லாமல் இருக்க வேண்டுமே. சிட்டிகை பெருங் காயத்தை ஒரு டீஸ்பூன் நீரில் கலந்தால் சற்றே பால் போன்ற நிறத்துடன் வாசனையும் வர வேண்டும். இல்லையென்றால் அது வெறுங்காயம்.

மிளகாய்த்தூள்:
அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்த மசாலாக்கள் காலம் எல்லாம் இப்போது இல்லை.அம்மியே அருங்காட்சியகத்துக்கு வந்துவிடுமோ என் றும் கூட நினைக்கதோன்றுகிறது. சரி மிளகாய்த்தூளுக்கு வருவோம்.நல்ல நிறத்தில் இருக்கும்பொடிகள் எல்லாம் தரமானவை என்று சொல்ல முடியாது. சிறிய தம்ளரில் நீர் விட்டு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்தால் செங்கல் தூளாக இருந்தால் அவை நீரின் அடியில் தங்கும்.இராசய னமாக இருந்தாலும் அதிக நிறம் கொண்டிருக்கும்.

மஞ்சள் தூள்:
மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மஞ்சளில் கலப்படம் இருக்கும் போது அவை எப்படி கிருமிநாசினி யாக செயல்படும்? மஞ்சள்பொடியை நீரில் கலக்கும்போது உடனடியாக நீரின் நிறம் மஞ்சளாக மாறினால் அவை கலப்படம் என்பதை நிச்சயமா க சொல்லலாம். மையஅரைத்த அரிசி மாவுடன் லெட் குரோமேட் என்ற இராசயன பொருள் கலந்து மஞ்சள் தூளாக விற்கப்படுகிறது. இதைக் கண் டறிய அரைடீஸ்பூன் மஞ்சள்தூளை 3 மில்லி ஆல்கஹாலுடன் 10 துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை கலந்து குலுக்கும் போது வயலெட் நிற மாக மாறினால் லெட் குரோமேட் கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.

தேன்:
ஒரு தம்ளர் நீரில் தேன் விட்டால் கரையாமல் தம்ளருக்கு அடியில் தங்கினால் சுத்தமான தேன்.சுத்தமான பருத்தி துணியை தேனில் நனைத்து எரியும் விளக்கில் காண்பித்தால் சுத்தமான தேனாக இருந்தால் அது பற்றி எரியும்.

இவ்வளவுதானா கலப்படம்இன்னும்இன்னும்சொல்லிக்கொண்டேபோகலாம். டீத்தூளில் புளியங்கொட்டை தூளும், அரிசியில் கல், நெய் போன்ற வற்றிலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. பார்த்து வாங்குங்கள் இல்லத்தரசிகளே!

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like