1. Home
  2. ஆரோக்கியம்

ஃபாஸ்ட் புட் பிரியர்களா நீங்கள் ? 

ஃபாஸ்ட் புட் பிரியர்களா நீங்கள் ? 

பரபரப்பான வாழ்க்கை சூழலில் உணவு கூட ஃபாஸ்ட் புட்டாக மாறிப்போனது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உணவு பட்டியலில் கண்டிப்பாக , ஃபாஸ்ட் புட் உணவு வகைகளை குறிப்பிடுகின்றனர்.

நாகரிகம் என்ற பெயரில் விஷ‌த்தை சிறுக சிறுக ஃபாஸ்ட் புட் போர்வையில் எடுத்துக்கொள்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு வாரமும் , ஒரு முறை சாப்பிட்டாலே இதன் பாதிப்புகள் பல மடங்கு என்பது உங்களுக்கு தெரியுமா? சரி ஃபாஸ்ட் புட் எடுத்து கொண்டால் என்ன விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என பார்க்கலாம்.

அதிக கலோரிகளும் ,கொழுப்புகளும் நிறைந்துள்ள ஃபாஸ்ட் புட் உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்புகள் நிரைந்திருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை முறையான வகையில் பெற விடாமல் ஃபாஸ்ட் வகை உணவு வகைகள் தடுக்கின்றன.

ஃபாஸ்ட் புட்டால் உடல் பருமன் அதிகமாவதுடன் உடலில் சுர‌க்கும் மெட்டபாலிசம் தொடர்பான ரசாயனங்களின் அளவும் குறைகின்றன. இதனால் ஜீரணத் தன்மை குறைந்து கொழுப்புக்கள் ஆங்காங்கே சேர்ந்து விடுகிறது.

இத்தகைய உணவுகள் உடலில் அதிக அளவில் சேர்ந்து உடல் பருமனுக்கு காரணமாவது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நீரிழிவு நோய்க்கு வழி வகுப்பதுடன் , காது கேளாமை, ரத்த அழுத்தம் போன்ற‌வற்றையும் ஏற்படுத்துகிறது.

இவ்வகை உணவுகளை உட்கொள்வதால் மிகவும் மோசமான விளைவான இதய நோய் ஏற்படும் என ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது . மேலும் பக்கவாதம் ,மாரடைப்பு போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் , ஊட்டசத்து குறைபாட்டிற்கு உள்ளாக நேரிடும் என்று அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like