தேனையும் பூண்டையும் இப்படி சாப்பிட்டா எடை வேகமா குறையும்...

சுத்தமான தேனில் நான்கு பல் பூண்டை நறுக்கி சேர்த்து ஊறவிடுங்கள். இரவு தூங்கும் போது ஊறவைத்துவிட்டால் பூண்டின் வாடை இருக்காது. மறுநாள் காலை எழுந்ததும் பல் தேய்த்து முதலில் ஒரு தம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து தேனில் ஊறிய பூண்டை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுங்கள். இதை சாப்பிட்ட அரைமணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிட வேண்டாம்.

தேனையும் பூண்டையும் இப்படி சாப்பிட்டா எடை வேகமா குறையும்...
X

அதிக எடை பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். எப்படி உடல் எடை குறைக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு இல்லாமல் ஒரு பக்கம் உணவை குறைக்கிறென் என்று உடல் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறார்கள். இதனால் எடையும் குறையாமல் நோயும் அதிகரித்து மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.

இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க முன்னோர்களின் வைத்தியம் நல்ல பலனை தரும். உடல் உழைப்பில்லாமல் உடல் எடையை கூட்டி கொண்ட நாம் அவர்கள் வழியை கடைபிடித்தாவது எடையை குறைக்கலாம். அதுவும் வேகமாகவே எப்படி என்று பார்க்கலாம்.

தேனை உடல் எடை குறையவும் கூட்டவும் பயன்படுத்துவதுண்டு. தேன் சுத்தமானதாக இருந்தால் ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும். அந்த காலத்திலும் இனிப்பு பொருள்கள் இருந்தது. ஆரோக்கியமான தேன். பனங்கருப்பட்டி, நாட்டுவெல்லம் போன்றவற்றை பயன்படுத்தி தான் தங்கள் ஆரோக்கியத்தை காத்துவந்தார்கள். இப்போது வெள்ளை சர்க்கரையும்கலப்பட தேனும் ஆபத்தை அதிகரிக்கவே செய்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது உடல் எடை குறைக்க தேனை எப்படி எதனோடு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேனையும் பூண்டையும் இப்படி சாப்பிட்டா எடை வேகமா குறையும்...

சுத்தமான தேனில் நான்கு பல் பூண்டை நறுக்கி சேர்த்து ஊறவிடுங்கள். இரவு தூங்கும் போது ஊறவைத்துவிட்டால் பூண்டின் வாடை இருக்காது. மறுநாள் காலை எழுந்ததும் பல் தேய்த்து முதலில் ஒரு தம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து தேனில் ஊறிய பூண்டை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுங்கள். இதை சாப்பிட்ட அரைமணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிட வேண்டாம். பிறகு வழக்கம்போல் உணவை திட்டமிட்டு குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்துகொள்ளுங்கள்.

காலையில் வெறும் வயிற்றீல் சாப்பிடுவதால் பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைய குறைய மந்ததன்மை போகும். உடலில் இருக்கும் வாயுக்களை விரட்டும். இரத்த அழுத்த்தை கட்டுக்குள் வைக்கும்.;அதிக பசியை கட்டுப்படுத்தி வைக்கும்.

தேனையும் பூண்டையும் இப்படி சாப்பிட்டா எடை வேகமா குறையும்...

பசி உணர்வு அதிகரித்தாலும் அளவாக இருக்கும். தேன் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். இதனால் உடல் கனம் குறைவதை நன்றாக உணரலாம். தினமும் தேனில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும். செய்துபாருங்கள். பிறகு ஆச்சரியப்படுவீர்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it