1. Home
  2. ஆரோக்கியம்

ஆஸ்துமா பிரச்சனைகளிலிருந்து விடுபட இதை சாப்பிடுங்கள் !!

ஆஸ்துமா பிரச்சனைகளிலிருந்து விடுபட இதை சாப்பிடுங்கள் !!


இந்தியாவில்  நெல்லிக்காயைப் போல் சீனாவில் விளையும் சீன நெல்லிக்காயே கிவி என அழைக்கப்படுகிறது. இந்தப் பழம் சற்று புளிப்பும் , இனிப்பும் கலந்த பழமாக உள்ளே அழகான பச்சை நிறத்தில் இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த உதவுகிறது. கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் அமிலம் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது. 

இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் ஆஸ்துமா, அடிக்கடி இருமல், தும்மல், சளி இருப்பவர்களுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு  கிவி பழத்தை தவறாமல் உட்கொண்டால், அவரது நுரையீரல் சிறப்பாக செயல்பட முடியும் எனவும், பெருமளவு  சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது எனவும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. 

கிவி இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சீராக்கி  இரத்த உறைதலைத் தடுக்கிறது.  கிவி உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் எந்தவொரு பக்க விளைவுகளும் கிடையாது.  கிவி உடலில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும், பொதுவான சளி மற்றும் காய்ச்சல் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. 

கிவியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமானம் போன்ற வயிற்று பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமைகிறது.போலிக் என்னும் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக  இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பலவகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள் உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பு...

newstm.in

Trending News

Latest News

You May Like