1. Home
  2. ஆரோக்கியம்

ஒரு நாளைக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடுங்க... அதிகமா சாப்பிட்டால்...

1

முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு நாளைக்கு ஒன்று மட்டுமே சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஒரு மஞ்சள் கருவில் மட்டுமே 200 மில்லிகிராம் அளவு கொலஸ்டிரால் இருக்கிறது.

அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டையின் மஞ்சள் கருவை ஒரு நாளில் எடுத்துக் கொள்ளும்போது இதய ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

முட்டை அதிகமாக சா்ப்பிடும்போது உடலின் கொலஸ்டிராலில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதல்ல. ரத்த அழுத்தத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

முட்டையில் சோடியமும் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் முட்டையை அதிகமாக உணவில் சேர்ப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு டயட்டில் இருப்பவர்கள் புரதத்தை அதிகப்படுத்துவதற்கு முட்டையை அதிகமாகச் சாப்பிடுவார்கள். தினமும் முட்டை அவர்களுடைய டயட்டில் கட்டாயமாக இருக்கும்.

ஆனால் முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதிகமாக முட்டை எடுக்கும்போது அதன் கலோரிகள் மற்றும் கொலஸ்டிரால் அளவும் அதிகமாகி, எடையை அதிகரிக்கச் செய்யும்.

புரதத்தின் தேவைக்காக அதிகப்படியாக முட்டையை எடுத்துக் கொள்ளும்போது குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்களை மட்டும் அதிகமாக எடுத்துக் கொ்ள்கிறோம்.

ஆனால் புரதத்தை மட்டும் கவனம் செலுத்துவதால் மற்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

முட்டையை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அது அழற்சியை ஏற்படுத்தக் கூடும்.

முட்டையின் மஞ்சள் கருவில் ஒருவித அழற்சி பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

முட்டையில் நல்ல கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் அதிகமாக இருக்கின்றன. அதேபோல இதில் கொலஸ்டிராலும் இருக்கிறது.

அளவுக்கு அதிகமாக முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது கட்டாயம் கொலஸ்டிரால் அதிகரிக்கும்.

Trending News

Latest News

You May Like