1. Home
  2. ஆரோக்கியம்

கொளுத்தும் வெயிலில் ஏற்படும் தாகத்தை கட்டுப்படுத்த குடிங்க ஷிகன்ஜி!!

1

பலர் கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி குடிப்பார்கள். இத்தகைய பானங்களில்  கலோரிகளைத் தவிர வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், உடல் பருமனும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே சமயம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சில பானங்களும் இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஷிகன்ஜி பற்றி பார்ப்போம்.

ஷிகன்ஜி:

வட இந்தியாவில் பேமஸ் ஆன இந்த பானம் கோடையில் கிடைத்த வரப்பிரசாதம். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடையச் செய்வதோடு, இழந்த ஆற்றலை மீண்டும் ஒரே நிமிடத்தில் பெறச் செய்யும். இந்த ஷிகன்ஜியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. 2 எலுமிச்சை

2. 1 டீஸ்பூன்  இஞ்சி 

3. ½ டீஸ்பூன் uppu

4. ½  டீஸ்பூன் கருப்பு உப்பு 

5. ½ டீஸ்பூன் சீரக பொடி

6. ½ டேப்ள் ஸ்பூன் சர்க்கரை.

செய்முறை:

2 டம்பளர் நீரில், எலுமிச்சை பழத்தை சாறேடுத்து கலந்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்தால் ஷிகன்ஜி ரெடி.! 

Trending News

Latest News

You May Like