ஒரே மாசத்துல 5 கிலோவாவது குறையணுமா அப்படின்னா தினமும் நைட்ல இதை குடிங்க..

இந்த பானத்தை எடுத்துகொள்ளும் நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்வதும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். அதோடு உணவிலும் அதிகப்படியான எண்ணெய் நிறைந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பாக்கெட் நொறுக்கு தீனிகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். அதுவும் ஒரே மாதத்தில்

ஒரே மாசத்துல 5 கிலோவாவது குறையணுமா அப்படின்னா தினமும் நைட்ல இதை குடிங்க..
X

கடுமையான டயட், நீண்ட நேர உடற்பயிற்சி இருந்தால் தான் உடல் எடை குறைய முடியும் போல என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் இயற்கை வழியில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே பக்கவிளைவில்லாமல் எடை குறையலாம் என்கிறார்கள் ஊட்ட சத்து நிபுணர்கள்.

அதிகப்படியான எடையை குறைக்க உடலில் இருக்கும் மெட்டபாலிச அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற உணவோடு உடற்பயிற்சியும் தேவை. உடற்பயிற்சியில் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றாலும் கூட நடைபயிற்சி, உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது போன்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது. கீழே தரையில் சம்மணமிட்டு அமர்வது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது எல்லாமே உடற்பயிற்சிதான். சரி இப்போது உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரகுடிக்க வேண்டிய பானம் என்ன பார்க்கலாமா?
பட்டை மசாலாக்களில் சேர்க்கப்படும் வாசனை பொருள் என்பது தெரியும். ஆனால் இவை வெறும் வாசனைக்கு மட்டுமல்ல. பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் பொருள் என்பது தெரியுமா? பட்டை உடல் எடை குறைப்பில் அற்புதமான பலனை தரக்கூடியது. எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். இதயத்தை பாதுகாக்கும் வகையில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.

ஒரே மாசத்துல 5 கிலோவாவது குறையணுமா அப்படின்னா தினமும் நைட்ல இதை குடிங்க..

பட்டையை மிக்ஸியில் அடித்து சுத்தம் செய்து வைத்துகொள்ளுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு தம்ளர் நீரை கொதிக்க வைத்து கால் டீஸ்பூன் அளவு பட்டை தூளை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு நீர் ஆறியதும் அல்லது மிதமான சூட்டுக்கு வந்ததும் தேன் சேர்த்து குடித்துவிடுங்கள். தூங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இப்படி குடித்தால் போதும். தொடர்ந்து இப்படி குடித்து வரும் போது உடல் எடை குறைவதை நன்றாக உணர முடியும்.

இந்த பானத்தை இரவில் குடித்தால் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகள் வெளியேறும். கழிவுகள் காலை வெளியேறும். உடலில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் கொழுப்புகள் வெளியேறும்.

இந்த பானத்தை எடுத்துகொள்ளும் நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்வதும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். அதோடு உணவிலும் அதிகப்படியான எண்ணெய் நிறைந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பாக்கெட் நொறுக்கு தீனிகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். அதுவும் ஒரே மாதத்தில்

newstm.in

Tags:
Next Story
Share it