1. Home
  2. ஆரோக்கியம்

இந்த கோடை காலத்தில் இந்த பழத்தை மறக்காம சாப்பிடுங்க..! அவ்ளோ நன்மைகள் இருக்கு..!

1

லிச்சி பழத்தை தமிழில் விழுதி, விளத்தி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் முட்டை வடிவில் காணப்படும். இதன் மேல் தோலை நீக்கினால், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம் காணப்படும். 

பிங்க் நிறத்தில் முட்டை வடிவத்தில் இருக்கும் லிச்சி பழம் கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் பழமாக உள்ளது.சாப்பிடவும் மிகவும் இனிப்பாக இருக்கும். கோடை கால பழமான இது தோல் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.

வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் பி 1, பி 2, பி 3, பி 6 வரையிலான வைட்டமின்கள், வைர்ரிபோஃப்ளேவின், தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த பழம் நீர்ச்சத்து நிறைந்தது, கோடை காலத்தில் அதிக தண்ணீர் தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, நீரேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தனை நன்மைகள் கொண்ட இந்த பழத்தை கோடை சீசனில் ஏன் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கியமான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகமாகும். இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சி விதையில் உள்ள உட்பொருட்கள் இதயத் தமனிகளைப் பாதுகாத்து கார்டியோ வாஸ்குலர் நோய்களைத் தீர்க்க உதவி செய்கிறது. இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

லிச்சி பழத்தை அதிகளவு உட்கொள்வதனால் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். ஏனெனில், இந்த லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளன. இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சுவைமிகுந்த லிச்சி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, இது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாசியம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் லிச்சி பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல்  தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

லிச்சி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவக்கூடியது.

லிச்சி விதையை உங்களுடைய டயட்டில் சப்ளிமெண்ட்டுகளைப் போல பயன்படுத்தும் போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கார்டியோ வாஸ்குலர் நோய்களைத் தடுக்க உதவி செய்கிறது.

லிச்சி பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளைச் சேகரித்து வெயிலில் நன்கு காய வைத்து அதை பொடி செய்து வீட்டிலேயே லிச்சி பவுடரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த பொடியை உங்களுடைய தினசரி ஸ்மூத்திகளிலும் யோகர்ட்டிலும் சாலட் வகைகளில் டிரெஸ்ஸிங்காகவும் பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிக்கு லிச்சி மீது ஆசை இருந்தால் அளவோடு எடுக்கலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. ஆனால் கர்ப்பிணிகள் லிச்சி சாப்பிட விரும்பினால் மருத்துவரின் பரிந்துரையோடு மட்டுமே எடுக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like