1. Home
  2. ஆரோக்கியம்

இந்த பொருட்களை மீன் சாப்பிடும்போது தெரியாம கூட சாப்பிட்ராதீங்க...!

1

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், சில உணவுகளுடன் மீனை சேர்த்து சாப்பிடுவது மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான நோய்களையும் தூண்டலாம்.

பால் பொருட்கள் பெரும்பாலும் நாம் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒன்று. பால் பொருட்களில் தயிர் மற்றும் மோர் போன்றவை தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் பெரும்பங்கு வகின்றன. சிலருக்கு தயிர் அல்லது மோருடன் சாப்பிட்டு முடித்தால்தான் திருப்தியாக உணர்வார்கள். ஆனால், என்னதான் பிரியமான ஒன்றாக இருந்தாலும், மீன் சாப்பிடும் போது, பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை சேர்த்து உண்ணக் கூடாது.அப்படி சாப்பிட்டால், செரிமான கோளாறுகள், வயிறு வீக்கம், வயிற்று வலி, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளுக்கு வழிவகுக்கும். பால் மற்றும் மீன், இரண்டும் அதிக அளவில் புரதங்களை கொண்டிருப்பதால், செரிமான மண்டலத்தை பாதித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மீன் சாப்பிட்ட உடன் காபி சாப்பிடுவது, மீனில் உள்ள மெர்குரியை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இதனால் மீனின் முழுமையான சத்துக்கள் நம் உடலில் சேர்வது தடைபடுகிறது.

மீன் மற்றும் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடும் போடு, சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் மீனில் உள்ள புரதங்களுடன் வினைபுரியலாம், இதன் விளைவாக விரும்பத்தகாத சுவையையும் ஏற்படுத்தலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. குழந்தைகளுக்கு முதன் முதலில் மீன் வகை உணவுகளை அறிமுகம் செய்யும் போது, இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல. அதிகம் பதப்படுத்தப்பட்ட அல்லது பொறித்த உணவுகளோடு மீனை சேர்த்து சாப்பிடும் போது மீன்களில் இருந்து கிடைக்கும் நன்மைகளை குறைய செய்யும் வாய்ப்பு அதிகம்.இவ்வகை உணவுகளில் இருக்கும் அதிக அளவு நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை. செரிமான அமைப்பை ஓவர்லோட் செய்யக்கூடும், ஏனெனில் இரண்டும் ஜீரணிக்க கடினமாகவும் நீண்ட நேரமும் எடுக்கும். பொறித்த உணவுகள், மயோனைஸ் அல்லது கிரீமி டிரஸ்ஸிங் போன்ற கொழுப்பு அல்லது எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை மேற்கூறியது போல் அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

 

பொதுவாகவே மாவுசத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை அளவோடு தான் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்பது தற்காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையாகவே இருக்கிறது. மாவு சத்து நிறைந்த உணவுகள் நாம எடை கூடுவதற்கும், இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக அளவு புரதம் நிறைந்திருக்கும் மீன் போன்ற உணவுகளோடு, உருளைக்கிழங்கு அல்லது பாஸ்தா போன்ற கடினமான அல்லது மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிகப்படியான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளுவது, செரிமான அமைப்பின் செயல்பாட்டை மந்தமடைய செய்யும்.

நம் உணவில் சேர்க்கப்படும் கார வகைகள் மற்றும் மசாலாக்கள் உணவின் சுவையை மிகைப்படுத்திக் கொடுக்கும். ஒரு சிலர் காரம் குறைவாகவோ அல்லது சரியான அளவிலோ சாப்பிடுவார்கள், மற்றொரு சிலருக்கு அதிக அளவிலான காரத்தின் மீது ஒரு அலாதி பிரியமே இருக்கும். வேறு சிலருக்கோ, அசைவத்தில் அதிக காரத்தை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். காரமான உணவுகளோடு மீனை சேர்த்து சாப்பிடும் போது சுவையாக தான் இருக்கும். ஆனால் அவை வயிற்றுப் புறணியை எரிச்சலூட்டி இரைப்பை குடல் அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நார்ச்சத்து பொதுவாகவே ஆரோக்கியமான ஒன்றாக தற்போது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளின் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருந்தாலும் மீன் சாப்பிட்ட உடனேயோ அல்லது அதிக அளவு நார்ச்சத்துள்ள உணவோடு மீனையோ சேர்த்து சாப்பிடும் போது இரண்டிலும் அதிக அளவில் புரதம் இருப்பதால் சிலருக்கு வாயு தொல்லை, வயிறு வீக்கம் அல்லது செரிமான அசௌகரியம் போன்றவற்றை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக பீன்ஸ், பருப்பு மற்றும் சில காய்கறிகள் இதில் அடங்கும்.

ஆல்கஹால் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் எப்போதும் உடலுக்கு நன்மை செய்வதில்லை என்றாலும், மீனை உணவாக எடுத்துக் கொண்ட பிறகு அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைவான அளவிலோ அல்லது பிற பொருத்தமான உணவுகளுடன் மது அருந்துவது சிறந்தது. சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் வாயு மற்றும் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தலாம், இது உணவுக்குப் பிறகு சங்கடமாக உணர செய்யும். அதற்குப் பதிலாக கார்பனேற்றப்படாத பானங்கள் அல்லது தண்ணீரை முயற்சி செய்யலாம். அதே போல் மீனில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களான பூண்டு அல்லது வேறு மூலிகை பொருட்களையும் அளவோடு பயன்படுத்துவது சிறந்தது. மேலும், மீன் சாப்பிட்டவுடன் இனிப்பு சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முடிந்தவரை குறைவான அளவிலோ அல்லது சில மணி நேர இடைவெளியிலோ உட்கொள்ளவது சிறந்தது.

Trending News

Latest News

You May Like