1. Home
  2. ஆரோக்கியம்

மழை காலத்தில் கீரை, மீன் சாப்பிட கூடாது சொல்வார்கள்... ஏன் தெரியுமா ?

1

எல்லாவகையான கீரைகளும், பச்சை இலை காய்கறிகளும் மிக மிக ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆய்வின் படி, டயட்டரி ஃபைபர், மக்னீஷியம், ஜிங்க் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ள தாவர உணவுகளில் அதிகமான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் வருவதற்கான சாத்தியமும் இருக்கிறது. அதாவது மழைக்காலத்தில் இந்த வகை உணவுகளில் அதிகமாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இவற்றை பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, நன்றாக சுத்தம் செய்து, உப்பு நீரில் அலசி, முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

மீன் மற்றும் கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. பல உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்துக்கள் எனப்படும் நுண் சத்துக்கள் கடல் உணவுகளில் கிடைக்கும். ஆனால் மழைக்காலத்தில் தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகம் இருக்கும் காலத்தில், மீன் சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது ஃபுட் பாய்ஸனை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. 

மழைக்காலம் என்றாலே, விதவிதமாக சூடாக சமைத்து சாப்பிடப் பிடிக்கும். குறிப்பாக, வறுத்த மற்றும் பொறுத்த உணவுகள் தினசரி உணவுகளில் இடம்பெறும். மழைக்காலம் என்று இல்லாமல், அடிக்கடி பொறித்த உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியமற்றது! ஆனால், மழைக்காலத்தில், ஈரப்பதம் காரணத்தால் உங்களுடைய செரிமான சக்தி முழுமையாக இயங்காது. எனவே, வழக்கத்தை விட செரிமானத்தின் வேகம் குறையும் மற்றும் தாமதமாகும். எனவே, எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகள் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தி, செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம்.

 மழைகாலத்தில் பழங்களை சாப்பிடும் முன்பு, அவற்றை நன்றாக கழுவி, உப்பு நீரில் அலசிய பின்பு தான் சாப்பிட வேண்டும். காற்று, நீர் வழியே தொற்று அதிகமாகவும், வேகமாகவும் பரவும் காரணத்தால், கடைகளில் விற்பனை செய்யப்படும் வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் தோல் நீக்கிய பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். வீட்டிலும் நீண்ட நேரம் பழங்களை வெட்டி வைத்திருக்க வேண்டாம். பழங்களை சாப்பிட வேண்டுமென்றால், சாப்பிடும் நேரத்தில் வெட்டி, ஃபிரெஷ்சாக சாப்பிடுங்கள்.

பானி பூரி, சமோசா, பஜ்ஜி, முதல் தள்ளுவண்டிக் கடைகளில் இட்லி, தோசை, சிக்கன் வரை விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. அங்கு உணவு, சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறது என்பதை எல்லா இடங்களிலும் உறுதி செய்ய முடியாது. நீர் தேக்கம் அதிகம் இருக்கும் மழைக்காலத்தில், சுகாதாரம் இல்லாத உணவு மற்றும் கடை இருக்கும் சுற்றுப்புறத்தில் பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். எனவே, இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மழைக் காலத்தில் உணவில், இனிப்பு அதிகம் வேண்டாம். பால், பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அதிகம் சாப்பிடக் கூடாது. மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை, மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவின் போது, தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது நல்லது. நீர் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் தவிருங்கள். கண்டிப்பாக மழைக் காலத்தில், உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவை சேர்க்காதிருத்தல் நல்லது.

மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது, சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும். மழைக்காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட, விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஒத்துக் கொள்ளாதவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. மழை சீசனில், கீரை அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் வேறு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Trending News

Latest News

You May Like