1. Home
  2. ஆரோக்கியம்

இருமல் இருக்கும் போது காபி குடிக்க கூடாது... ஏன் தெரியுமா ?

1

இருமல் என்பது உடலில் கபம் அதிகமாகும் போது உண்டாகும் ஒவ்வாமையிலிருந்து விடுபடும் ஒரு வழி.இந்த இருமல் இருக்கும் போது அன்றாட விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் செய்ய வேண்டியவை என்ன செய்யகூடாதவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நாள் முழுவதும் தண்ணீர், வைட்டமின் சி நிறைந்த பழச்சாறு என சுகாதாரமான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் ஆகாரங்களை குடித்துவருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக வைத்திருக்கலாம். இது உடலில் இருக்கும் கபத்தை வெளியேற்றும். சளியை தளர்த்தி இறுக்கியதை இளக்கி அதை மென்மையாக்கி வெளியேற்றும். மந்தமான அதாவது வெதுவெதுப்பான மூலிகை தேநீர் தொண்டையில் இருக்கும் சளியை கரைக்கும்.

குடிக்க கூடாதது

காஃபி, கார்பனேட் பானங்கள் சோடாக்கள், எனர்ஜி பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பொதுவாக தொண்டை வலி, இருமல் காலத்தில் சூடாக காஃபி பானங்கள் குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வெதுவெதுப்பான நீர் குடித்தாலே போதும். பெரியவர்கள் ஆல்கஹால் பழக்கம் கொண்டிருந்தால் அவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.

சாப்பிட வேண்டியது

வைட்டமின் சி நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள். குடை மிளகாய், கிவி மற்றும் கருப்பு திராட்சை போன்றவை உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொடர்ச்சியான இருமல் வாந்தியை உண்டாக்கும். உணவை மென்மையானதாக திரவமாக எடுத்துகொள்வதன் மூலம் இருமல் அதிகரிக்காமல் நிவாரணம் கிடைக்கும்.

சாப்பிட கூடாதது

குப்பை உணவுகள் என்று சொல்லக்கூடிய பொருள்களை தவிர்க்க வேண்டும். ஆழமான வறுத்த உணவுகள், காரமான உணவுகள், அதிக மசாலா சேர்த்த இறைச்சி என இவை எல்லாமே தொண்டையில் எரிச்சலை உண்டாக்க செய்பவை. இது இருமலை மேலும் மோசமாக்கும்.

செய்ய வேண்டியது

சளி இருமல் நிவாரணத்துக்கு சூடான நீரை முகத்தின் அருகே கொண்டு சென்று பொறுமையாக உள்ளே இழுப்பதன் மூலம் சளி கரைந்து வெளியேறும் .இதனால் கோழை தொண்டைகட்டு இருந்தலும் கரைந்து வெளியேறி இருமலை குறைய செய்யும். தேவையெனில் ஸ்ப்ரேவும் பயன்படுத்தலாம்.


செய்ய கூடாதது

ஆவி பிடிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் படுக்கை அறையை இன்னும் சுத்தமாக வையுங்கள். தூசிகளும், ஒவ்வாமையும் இருக்கும் பொருள்கள் உங்கள் இருமலை மோசமாக்க செய்யும். நீங்கள் இருக்கும் அறையில் சுத்திகரிப்பு கருவியை கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.


இருமலின் ஆரம்ப கட்டத்தில் அதை குணபடுத்த விரும்பினால் தேன் மற்றூம் மஞ்சள் சேர்த்து மருந்தாக உட்கொள்ளலாம். தேன் சிறந்த இருமல் நிவாரணி. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை மெம்படுத்தக்கூடியவை. இவை இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும். குறிப்பாக இரவு நேர இருமலிலிருந்து.

செய்ய வேண்டியது

நல்ல காற்றோட்டமான இடத்தில் இருப்பதன் மூலம் நுரையீரலுக்கு சுத்தமான காற்று கிடைக்கும். இருமல் வெகுவாக அதிகரிக்காது. இருமலால் மூக்கு, தொண்டை போன்றவை எரிச்சலை கிளப்பாமல் தடுக்க நல்ல தூய்மையான காற்று உதவும்.

செய்ய கூடாதது

அறைகள் முழுவதும் அடைத்தபடி ஏசி காற்றை நம்பி இருக்க கூடாது. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அல்லது அந்த பழக்கத்தை கொண்டிருப்பவர்களின் அருகில் இல்லாமல் இருக்க வேண்டும். புகை நெடி இருமலை அதிகரிக்க செய்யும்.


செய்ய வேண்டியது

இருமல் இருக்கும் போது உடலுக்கு நன்றாக ஓய்வு தேவைப்படும். குறைந்தது நாள் ஒன்றுக்கு 10 மணி நேரமாவது ஓய்வில் இருந்தால் இருமல் நிவாரணம் கிடைக்கும். இரவு நேரங்களில் படுக்கைக்கு அருகே இருமலை கட்டுப்படுத்த வெதுவெதுப்பான நீர், மூக்கடைப்பு இல்லாமல் இருக்க ஸ்ப்ரே என அனைத்தையும் அருகே வைத்துகொண்டு ஓய்வு எடுப்பது தொந்தரவில்லாமல் இருக்கும். பக்கவாட்டில் ஒருக்களித்து படுப்பது நல்லது.

செய்ய கூடாதது

படுத்தால் இருமல் வருகிறது என்று பலரும் தூங்காமல் உட்கார்ந்தபடி அல்லது படுக்கையில் சாய்ந்தபடி இருப்பார்கள். இதுவும் இருமல் பிரச்சனைக்கு தீர்வு தராது. அதே போன்று மல்லாந்து முதுகை படுக்கையில் நன்றாக ஊன்றியபடி தூங்குவது இருமலை அதிகரிக்க செய்யும்.

Trending News

Latest News

You May Like