1. Home
  2. ஆரோக்கியம்

திடீரென வயிறு வலிக்குதா..? உடனடி நிவாரணம் தேவையா? இதைப் படிங்க!

1

வயிறு உப்புவதன் தொடர்ச்சியாகவே வயிற்று வலி வரத் தொடங்குகிறது. எரிச்சலூட்டக் கூடிய இந்த வலியாலும், ஓவரியன் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் வயிற்று வலி வரும். இந்த வயிற்று வலியை தவிர்க்க சில மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உள்ளன. உங்களுக்கு வயிற்று வலி இருந்தால் இங்கே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி உடனடியாக நிவாரணம் பெற முடியும்.
பொதுவாகவே உங்கள் அடிவயிறு சரியாக வேலை செய்யாத காரணத்தால் தான் வயிற்று வலி வரத் தொடங்கும். மலம் கழிப்பது முறையாக நடக்காமலிருத்தல், மலச்சிக்கல் மற்றும் வாயுக்கள் உருவாதல் ஆகியவற்றால் வலி உண்டாகும். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் வயற்றை சரியாக பராமரிக்க முடியும். இது வலியைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் செய்கிறது.

உங்கள் வயிறு உப்பியும், கனமாகவும் இருப்பதாக உணர்ந்தால் வெளியே சற்றே காலாற நடந்து செல்லுங்கள். இதன் மூலம் இயற்கையான முறையில் வயிற்று வலியை குறைக்கவும் மற்றும் உடனடி நிவாரணமும் பெற முடியும். மெதுவாக நடக்க வேண்டாம், அதனால் எந்த பயனும் கிடையாது. ஒவ்வொரு சாப்பிட்ட பின்பும் சற்றே நடந்து சென்று வருவதை பழக்கமாக்கிக் கொண்டால், எதிர்காலத்தில் வயிற்று வலி வராமல் தவிர்த்திட முடியும்.

சோடா அல்லது கார்பன்-டை-ஆக்சைடு உள்ள பானங்களை குடிப்பதன் மூலம் வயிறு தொடர்பான பல்வேறு கோளறுகளை சரி செய்ய முடியும். உங்கள் வயிறு எப்பொழுதெல்லாம் கனமாகவும், கடினமாகவும் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த பானங்களை குடிப்பதால் பலன் கிடைக்கும். வயிற்றுக்குள் ஏற்கனவே உள்ள வாயுக்களுடன் வினை புரிந்து, அவற்றை வெளியேற்றும் பணியை கார்பன்-டை-ஆக்சைடு செய்து வருகிறது. இதன் மூலம் வயிறு சற்றே இதமாக இருப்பதையும், பெருமளவு வலி குறைவதையும் உணரலாம்.

புதினா சாப்பிடுவதால் வயிற்றுவலியும், வயிறு உப்புசமாக இருப்பதும் பெருமளவு குறைகிறது. வயிறு உப்புசமாக இருப்பதற்கு சிகிச்சையெடுத்து விட்டால் போதும், வயிற்று வலியும் காணாமல் போய் விடும். புதினாவை தேநீரிலும், துவையலாகவும் சாப்பிடலாம். நுரையுடைய பானங்களுடன், புதினாவையும் சேர்த்து சாப்பிட்டால் அது சிறந்த பலனைக் கொடுக்கும். புதினாவுடன் பிற உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலியிலிருந்து உடனடி நிவாரணம் உறுதி. இஞ்சி, கருப்பு உப்பு (Black Salt), எலுமிச்சை சாறு போன்றவற்றுடன் புதினாவை கலந்து சாப்பிடலாம். இந்த உணவுகளில் எதை சாப்பிட்டாலும் அது வயிற்று வலியை குறைத்து, வயிற்றை இதமாக்குகிறது.

மெதுவாக மற்றும் சரியாக மென்று சாப்பிடுவதன் மூலமாக வயிற்றில் உணவு தங்கி விடுவதைத் தவிர்க்க முடியும். இதன் மூலம் வாயுக்கள் உருவாவதை தவிர்த்திட முடியும். உணவு முறையும், தொடர்ந்த உடற்பயிற்சியும் செரிமாணம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தவிர்க்க உதவுகின்றன. மேலும், சுகாதாரமில்லாத உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும் மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் வயிற்று வலியை விரட்ட நாம் கடைபிடிக்க வேண்டிய கடமைகளாகும். இந்த செயல்பாடுகளில் எதுவும் உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

Trending News

Latest News

You May Like