1. Home
  2. ஆரோக்கியம்

தேன் நெல்லிக்காயில் உண்மையிலேயே வைட்டமின் சி இருக்கிறதா? டாக்டர் விளக்கம்..!

1

சற்று இனிப்பு, அதிக புளிப்பு, மிஞ்சீய துவர்ப்பு என்று கொண்டிருக்கும் நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள் குறித்து தெரிந்துவைத்திருக்கிறோம். நெல்லிக்கனியை அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் தேன் நெல்லி சாப்பிடலாம். 

நெல்லிக்காயை கொட்டையில்லாமல் நீள்வாக்கில் வெட்டி இலேசாக தட்டில் பரத்தி வைக்கவும். இப்போது சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி விட்டு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு கை போட்டு குலுக்கவும். பிறகு மீண்டும் தேன் மீண்டும் நெல்லிக்காய் துண்டுகள் என்று மாறி மாறி சேர்த்து நன்றாக குலுக்கி இறுதியாக எஞ்சியிருக்கும் தேனை முழுவதுமாக ஊற்றி பாட்டிலை நன்றாக குலுக்கி வெயிலில் வைத்து எடுக்கவும். அப்படியே தேனோடு வேண்டுமெனில் பாட்டிலிலேயே ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். அல்லது கடையில் விற்பது போல் வேண்டுமெனில் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்தபிறகு நெல்லிக்காயை வெளியில் எடுத்து தட்டில் கொட்டி காயவைத்து மீண்டும் இரவு நேரத்தில் தேனில் ஊறவைக்கவும். இதே போல் காலையில் வெயிலிலும் இரவு தேனிலும் ஊறவைத்து எடுத்தால் தேன் நெல்லி தயார். 

ஆனால் பலர் இந்த தேன் நெல்லிக்காயை வைட்டமின்-சி யை பெற்றுக்கொள்வதற்காக சாப்பிடுவதாக கூறுகின்றார்கள். உண்மையில் இதில் வைட்டமின் சி இருக்கிறதா?

டாக்டர்களிடம் கேட்டால் இல்லவே இல்லை என்கின்றனர்.. ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா ? 

வைட்டமின் -சி வெப்பத்தில் அழிவடையக் கூடியது என்பதே அறிவியல் ரீதியான உண்மை. தேன் நெல்லிக்காய் செய்யும் போது முதலில் நெல்லிக்காயை அவிப்பார்கள். இதிலேயே நெல்லிக்காயில் அடங்கியுள்ள 75 சதவீதமான வைட்டமின் -சி அழிவடைந்துவிடுகின்றது.

பின்னர் அதில் தேன் கலந்து வெயிலில் ஊறவைப்பார்கள், இதனால் சூரிய ஒளி காரணமாக மீதமுள்ள 25 சதவீதம் வைட்டமின் -சி சத்தும் அழிவடைந்துவிடுகின்றது என்பதே உண்மை.

இனிமேலாவது வைட்டமின்- சி சத்துக்களை பெற வேண்டும் என நினைத்ததால் நெல்லிக்காயை காயாகவே சாப்பிடுங்கள், அப்போது 2 அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும் கிட்டத்தட்ட 400 மி.கி வைட்டமின்- சி உடலுக்கு கிடைத்துவிடும்.


இத்த அளவு நாளொன்றுக்கு சராசரியாக மனித உடலுக்கு தேவையான வைட்டமின்- சி சத்தின் அளவை குறிக்கும்.

இதற்கு பிறகு தேன் நெல்லிக்காயை கண்டவுடன் வைட்டமின் -சி நிறைந்த உணவு என நினைக்காதீர்கள் 

Trending News

Latest News

You May Like