1. Home
  2. ஆரோக்கியம்

தாயின் அதிக நேர தூக்கம், குழந்தையின் இறப்பிற்கு காரண‌மாக அமையும்? அதிர்ச்சி தகவல்

தாயின் அதிக நேர தூக்கம், குழந்தையின் இறப்பிற்கு காரண‌மாக அமையும்? அதிர்ச்சி தகவல்

கர்ப்பமாக உள்ள பெண்கள் தூக்கத்தின் போது பலவிதமான சிக்கலை சந்திக்கின்றனர். குறிப்பாக அடிக்கடி சிறு நீர் கழித்தல், மூச்சுத் திணறல், வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் போன்ற காரணங்களால் சரிவர தூங்க இயலாது. இதனால் கரு வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும் என நாம் கேள்விபட்டிருப்போம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பெண்கள் அதிக நேரம், குறிப்பாக 9 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உறங்கினாலோ, படுத்திருந்தாலோ, பிரசவத்தின் போது சிக்கல் அல்லது குழந்தை, பிறப்பிற்கு முன்னரே இறந்தவிடும் அபாயம் உள்ளதாக மருத்துவ‌ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

கர்ப்பம் தறித்த 30 பெண்களில் 16 பெண்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர் என்றும், குழந்தை பிறப்பதற்கு முன்னரே இறப்பதற்கு காரணம் தாயின் அதிக நேர தூக்கம் என்னும், அதிர்ச்சி தகவலை சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக நேரம் தூங்குவதால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலங்களில் உடலையும் , மனதையும் புத்துணர்வுடன் வைத்து கொள்ள; நடனம் ஆடுவது, பாடல் கேட்பது, யோகா செய்வது மற்றும் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள‌ வேண்டும்.



குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அஸ்வகந்தா பொடி மிக சிறந்த மருந்தாகும். அனைத்து மூலிகை கடைகளிலும் கிடைக்கும் இந்த பொடியை முதல் மூன்று மாதங்களுக்கு சுத்தமான பால் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால், கர்ப்ப காலங்களில் ஏற்படும் மன மற்றும் உடல் உபாதைகளை தவிர்க்க முடியும். பிரசவமும் எளிதாக இருக்கும்.

முடிந்தவரை பகலில் தூங்குவதை தவிர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை சூலலை அமைத்துக் கொள்ள வேண்டும்.


newstm.in

Trending News

Latest News

You May Like