1. Home
  2. ஆரோக்கியம்

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கிறீர்களா?

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கிறீர்களா?


குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டிய முதல் வேலை குழந்தையின் பிறந்த நேரத்தைத் துல்லியமாக குறித்து ஜாதகம் எழுத வேண்டியதுதான்.. பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தையும் ராசியையும் கணித்து எழுதப்படும் ஜாதகம் வாழ்நாள் முழுமையும் மிக மிக முக்கியமானது.

சிலர் குழந்தை பிறந்தவுடன் குழந்தை உயர் கல்வி பெறுவானா? அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? தனியார் துறைதானா? சொந்த தொழில் உண்டா? வீடு மனை வாகனம் உண்டா? திருமணத்தில் தோஷம் ஏதேனும் இருக்கிறதா? சுத்தமான ஜாதகமா? நல்ல கணவன்/ மனைவி அமைவார்களா? குழந்தை செல்வம் இருக்குமா? குழந்தை வளர்ந்ததும் தாய், தந்தையரை கவனிப்பார்களா? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். குழந்தையின் வளர்ச்சியை அப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அதிகப்படியான ஆர்வத்தோடு இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குழந்தை கருவில் உண்டாகும் போது கருவளர்ச்சியடையும் 3 மாதங்களிலேயே குழந்தையின் ஜாதக பலன் தொடங்கிவிடும் என்கிறது. அதனால்தான் ராஜாக்கள் காலத்தில் அரண்மனை ஜோதிடர் கணித்து கூறும் நேரங்களில் மட்டுமே ராஜா ராணி கூடினார்கள். கணவன், மனைவி இருவரது ஜாதகத்திலும் நல்ல தசாபுக்தி நடக்கும் காலகட்டத்தில் கரு தரித்தால் பிறக்கும் குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருப்பதோடு பெற்றோருக்கும் சிறப்பான வாழ்வை தருவதாக அமையும். மாறாக தசாபுக்தியில் காலம் சரியில்லாமல் இருக்கும் போது கருத்தரித்தால் குழந்தை ஆரோக்கியமற்று இருப்பதோடு வாழும் முழுமைக்கும் துன்பத்தை சந்திக்கும் ஜாதகமாக அமைந்துவிடுகிறது என்கிறது சாஸ்திரம்.

கருவுறும்போதே தொடங்கிவிடும் ஜாதகப்பலனால் சில பெற்றோர்கள் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்வதும், தொழிலில் வளர்ச்சி காண்பதும், பணி உயர்வு பெறுவதும் நடக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்க குறைந்தது 3 வயதேனும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் பெற்றோர்களுக்கு வளர்ச்சியைக் கொடுப்பதுபோல் நேர் மாறாக துன்பத்தைக் கொடுக்ககூடிய ஜாதகமாகவும் அமையலாம் என்பதால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான அன்பு இடைவெளி குறைந்து விடக் கூடாது என்பதால்தான் என்கிறார்கள் பெரியவர்கள்.

அப்படியானால் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்ககூடாதா என்று கேட்கலாம். நட்சத்திரம், ராசி கணிக்கும் போது மேலோட்டமாக குழந்தையின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, தாய்மாமன் ஆரோக்கிய நிலையை மட்டும் பார்க்கலாம். குழந்தையின் ஆயுள் பற்றி நிச்சயம் கேட்கலாம். குறிப்பாக பாலாரிஷ்டம். இது குழந்தையின் ஆயுளைக் குறிக்கும். மாறாக பிறந்த குழந்தைக்கு செவ்வாய் தோஷம் இருக்கா? களத்திர தோஷம் இருக்கா? என்ன படிக்கும்? கல்யாணம் பற்றி சொல்லுங்கள் என்ற கேள்விகளெல்லாம் வேண்டாமே..

பிறந்த குழந்தை 12 வயது பூர்த்தி அடைந்தபிறகு கல்வியில் என்ன துறையில் சிறந்து விளங்குவான்? உயர் கல்வி? பெற்றோர்களின் தொழில் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் எந்த துறையில் சிறந்து இருப்பார்கள் போன்றவற்றை இந்த வயதில் தெரிந்து கொள்வதுதான் நல்லது.

இல்வாழ்க்கைக்கு அவர்கள் தயார் ஆகும் போது அதாவது 20 வயதுக்கு மேற்பட்ட பிறகே செவ்வாய் தோஷம், நாக தோஷம், திருமணத்தில் கால தாமதம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like