வாரத்திற்கு ஒரு நாள் காலிபிளவர் ஏன் சாப்பிட வேணும் தெரியுமா ?
காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.
100 கிராம் காலிபிளவரில் 42.5 மில்லிகிராம் `வைட்டமின் சி' இருக்கிறது. இது உடலில் அத்தியாவசியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்துப்பொருள். இன்டோல் 3 கார்பினோர், சல்பராபேன் போன்ற அரிய சத்துக்கள் இதில் அடங்கி உள்ளது. இவை ஆண், பெண் உயிரணு மற்றும் கருவியல் சார்ந்த தேவைகளுக்கு அத்தியாவசியமானவை. மேலும் புற்றுநோய்க்கு எதிரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர வைட்டமின்கள் பி5, பி6, பி1, தாது உப்புக்களான மக்னீசியம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் என எண்ணிலடங்கா அத்தியாவசிய சத்துக்களும் காலிபிளவரில் அடங்கி இருக்கின்றன. காலி பிளவரில் சாம்பார், பொறியல், குருமா என கறி வகைகள் செய்து சாப்பிடலாம். பக்கோடா செய்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்."
நம்முடைய குடலில் உள்ள நன்மை தரும் பக்டீரியாக்களை அதிகப்படுத்தி, நோய்த்தொற்றுகளை தவிர்க்க நார்ச்சத்து இன்றியமையாத ஒன்று.காலிபிளவரில் இந்த நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் செரிமானத்தை ஊக்கப்படுத்துவதுடன் பலநாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.ஒரு கப் காலிபிளவரில் 3 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்களது ஒருநாளைக்கான 10 சதவிதித்தை பூர்த்தி செய்துவிடும்.எனவே செரிமானமின்மை, மலச்சிக்கல், குடல் அழற்சி உட்பட பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
காலிபிளவரில் Glucoraphanin நிறைந்துள்ளதால், தொடர்ந்து உட்கொள்ளும் போது ரத்த ஓட்டம் சரியாக இருப்பதுடன், ரத்த குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.Glucoraphanin நம் உடலில் சென்றதும் isothiocyanatesஆக மாறுவதால், நோய் எதிர்ப்பு பண்புகளை தூண்டிவிடுகிறது, மேலும் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.குறிப்பாக ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.காலிபிளவரில் உள்ள glucosinolate, glucoraphanin மற்றும் sulforaphane தாதுக்கள் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்வதுடன் தீமை தரும் பக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.மேலும் அல்சர் உட்பட செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
எலும்பு மூட்டுகள் மற்றும் தேய்மானம் ஆகாமல் இருக்க விட்டமின் சி சத்து அவசியம், விட்டமின் சி அதிகம் இருந்தால் மட்டுமே ம்காலிபிளவரில் நிறைந்துள்ள விட்டமின் சி, கொலஜன் உற்பத்தி சீராக நடைபெறும்.காலிபிளவரில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது, குறிப்பாக தேவையான அளவு விட்டமின் கேயும் இருப்பதால் எலும்புகள் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவிபுரிகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது.
ஆரோக்கியமான சருமம் மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு தேவையான அமினோ ஆசிட்கள் காலிபிளவரில் இருக்கின்றன.இவை தலைமுடியை வலுப்படுத்தும் கெராட்டின்கள் உருவாகவும், பளப்பான சருமத்திற்கு தேவையான சிலிகான் உருவாகவும் காரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நிறைந்துள்ளதால், மன அழுத்தத்தை குறைக்கிறது.மிக முக்கியமாக நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை சமன்படுத்துவதால், குறைந்த இரத்த அழுத்தம் வராமல் பாதுாக்கும்.இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பலநோய்கள் நம்மை அண்டாமல் செய்கிறது.
மூளை மற்றும் நரம்பணுக்கள் சேதமடையால் இருக்க பாஸ்பரஸ் மற்றும் கோலின் சத்துக்கள் அவசியம், இவை இரண்டுமே காலிபிளவரில் நிறைந்துள்ளன.இதுதவிர பொட்டாசியம், விட்டமின் பி6 மூளை சீராக செயல்படவும், நரம்புகளுக்கிடையேயான சமிஞ்கைகள் சரியான முறையில் கடத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்து, கிருமித் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருப்பதே சரியான ஒன்று, ஆனால் இன்று பலருக்கும் அதீத உடல் எடை பிரச்சனை இருக்கிறது.காலிபிளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.காலிபிளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடலின் வளர்சிதைமாற்றப் திறனை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.