1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் தெரியுமா ? பசலைக்கீரை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்..!

1

 பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் வளமான அளவில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்தசோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக்கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். இந்நிலையில் தினமும் வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Pasalai keerai

உடல் எடையை குறையும்:

உடல் பருமனால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் இந்த பசலைக்கீரை ஜூஸை குடித்து வந்தால், மிக வேகமாகப் பலன் கிடைக்கும். பொதுவாகவே பசலைக்கீரையில் கார்போஹைட்ரேட் அளவும் கலோரி அளவும் மிகக் குறைவு என்பதனால் நிச்சயம் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

எலும்பு வலிமை:

வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்தால், உடலை வலுவாக வைத்திருக்கலாம். மேலும் கீரையில் வைட்டமின் கே வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியோகால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

Bone

பார்வைக் கோளாறைத் தடுக்கும்:

வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால் கண் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

வயிற்றை சுத்தம் செய்யும்:

வயிற்று புண்னை ஆற்றுவதில் பசலைக்கீரை சிறந்த மருந்தாகும். அதுமட்டுமன்றி வயிற்றை சுத்தம் செய்ய இந்த ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரலாம், இது ஜீரண மண்டலத்தினுடைய செயல்பாடுகளை முறைப்படுத்தி, செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க உதவி செய்யும்.

Skin

சரும ஆரோக்கியம்:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்க இந்த ஜூஸை உட்கொள்ள வேண்டும். இவை முகத்தை பளபளக்க உதவும். அதுமட்டுமன்றி ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் கொண்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like