சாப்பிட்ட பிறகு பாக்கு ஏன் போடுகிறார்கள் தெரியுமா?
சாப்பிட்ட பிறகு பாக்கு ஏன் போடுகிறார்கள்? பீடா ஏன் போடுகிறார்கள் தெரியுமா? பாக்கில் ஜீரணமாவதற்குத் தேவையான வேதிப்பொருள் இருக்கு. புளிச்ச ஏப்பம் வருவதை சோம்பு தடுக்கிறது. இப்படி, எல்லாவற்றிற்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்: வெற்றிலைகள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக உள்ளது. இது உடலில் நார்மல் PH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. குடல் சார்ந்த சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற இரவு நேரத்தில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போடவும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவும்.
சுவாச பிரச்சனைகள் குறையும்: மார்பு சளி, நுரையீரல் அடைப்பு மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு வெற்றிலைகள் சிறந்த நிவாரணம் அளிக்கும். குறிப்பாக இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு வீட்டு மருந்தாக வெற்றிலை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவி சூடாக்கி மார்பில் வைத்தால் congestion பிரச்சனை குணமாகும்.உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெற இரண்டு கப் தண்ணீரில் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையோடு சில வெற்றிலைகளை சேர்க்கவும். பின்னர் இதனை 1 கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க வைத்து நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகவும்.
பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்: வெற்றிலையில் அற்புதமான ஆன்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வெற்றிலைகளில் இருக்கும் பாலிபினால்கள் சாவிகோல் கிருமிகளிலிருந்து இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது. வெற்றிலைகள் பூஞ்சை தொற்றுகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
வாய்வழி ஆரோக்கியம்: வெற்றிலையில் ஏராளமான ஆண்டிமைக்ரோபியல் ஏஜென்ட்ஸ் உள்ளன, இவை வாயில் வசிக்கும் பல பாக்டீரியாக்களை எதிர்த்து திறம்பட போராடுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு துவாரங்கள், பிளேக் மற்றும் பல் சிதைவு போன்ற சிக்கல்களையும் உருவாக்குபவை. பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்றுகளை நீக்க வெற்றிலைகள் உதவுகின்றன.
மூட்டு வலிக்கு நிவாரணம் : வெற்றிலைகளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியம், வலியை கணிசமாக குறைக்க உதவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட எலும்புகள், மூட்டுகள் வலி மற்றும் வீக்கத்தின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கின்றன.
நீரிழிவு நிலை: டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெற்றிலை பொடியை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சீர்காக இருக்கும் என பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. வெற்றிலை ஒரு வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் கட்டுப்பாடற்ற ரத்த குளுக்கோஸ் காரணமாக ஏற்படும் அழற்சியை குறைத்து நீரிழிவு நிலையை நிர்வகிக்க உதவுகிறது.
சுக்கை வாங்கி அதை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கருப்பட்டி போட்டு குடித்தால் நன்றாக பசி எடுக்கும். தூக்கமும் வரும், சளி பிடிக்காது. இப்படி ஏகப்பட்ட குணங்கள் சுக்கிற்கு இருக்கிறது
நாம் வாழை இலையில் சாப்பிடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. இரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும், தோலை பள பளப்பாக்கவும், மூளைக் காய்ச்சலைத் தடுக்கவும் செய்கிறது. என்ன வாழையிலையில் சாப்பிட ரெடியாகிட்டீங்களா?
துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும். வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது.
கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.