1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் தெரியுமா ? பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும்..!

1

ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் சக்தி திராட்சை பழத்தில் அதிகளவு உள்ளது. திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது 

மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுவலிக்கு தினமும் திராட்சை சாறு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல நாற்பது வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனை தீர திராட்சை பழம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

திராட்சை அல்சருக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்திடும். கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும் திராட்சையை எடை குறைவாக உள்ளவர்கள், உடலில் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சூரியக் கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. ஒரு கைப்பிடியளவு திராட்சையை அரைத்து அப்படியே முகத்தில் பூசிக் கொண்டு 15 நிமிடங்களில் கழுவிவிடலாம். அல்லடு திராட்சையை பாதியாக வெட்டி முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழுத்தி முழுவது தேய்த்து லேசாக மசாஜ் செய்திடுங்கள். இது நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு பொலிவைக்க் கொடுத்திடும். அத்துடன் சருமத்திற்கு ரத்த ஓட்டத்தைக் கொடுத்து, சுருக்கங்களை தவிர்த்திடும்.
 

சாப்பிடக்கூடாது : அசிடிட்டி, அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திராட்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது இவை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயுத்தொல்லையை ஏற்படுத்திடும்.

எப்போ சாப்பிடலாம் ? : இரண்டு வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் பழங்களை சாப்பிடலாம். இந்த சமயத்தில் பழங்களை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதுமட்டும் இல்லாமல் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகவும், கொழுப்புச்சத்து சேராமலும் பார்த்துக் கொள்ளும்.

Trending News

Latest News

You May Like