1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் தெரியுமா ? தர்பூசணியை வெட்டாமல் பிரிட்ஜில் வைக்கக்கூடாது..!

1

தர்பூசணியை, வெட்டாமல் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வெட்டாமல் வைத்தால், சுவை, நிறம் மாறிவிடும்.. தர்பூசணி பழத்தை எப்போதுமே பிரிட்ஜில் வைத்திருந்தால், அதன் உள்ளே பாக்டீரியா வளர்ச்சி பெற்றுவிடுமாம்.

கோடை காலத்தில் எல்லோராலும் விரும்பி உட்கொள்ளப்படும் தர்பூசணி ஒரு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். அதேபோல் தான் மாம்பழமும் கோடைக் களத்தில் தான் அதிகம் கிடைக்கும். மக்கள் இதுபோன்ற சீசனில் கிடைக்கும் பழங்களை விலை குறைந்த நேரத்தில் வாங்கி பிரிட்ஜில் வைத்துக் கொள்ள நினைப்பர். அப்படி பிரிட்ஜில் வைத்தால் அது இயற்கையாகவே அந்த பழங்களில் உள்ள சுவையை பாதிக்கும். அதுவும் குறிப்பாக தர்பூசணியை ஒரு போதும் வெட்டாமல் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி தர்பூசணியை வெட்டாமல் பிரிட்ஜில் சேமித்து வைத்தால், அது பழத்தின் சுவையையும் அதன் நிறத்தையும் மாற்றக்கூடும். அதேபோல் பழத்தை நாம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் அதன் உள்ளே பாக்டீரியா வளர்ச்சி பெறும் என்ற பயமும் உள்ளது.

இவை அனைத்தையும் மீறி நீங்கள் குளிர் சாதனப் பெட்டியில் பழங்களை சேமிக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் பழங்களை வெட்டி விட்டு தான் ஸ்டோர் செய்ய வேண்டும்.

இதுபோலவே, வெங்காயம், பூண்டு, தேன், அவகேடோ, தக்காளி, பிரட் போன்ற பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து கொள்ள கூடாது. இவற்றையெல்லாம் வெளியில் வைத்தே நாம் பயன்படுத்த வேண்டும்.

எப்போதுமே தேங்காய், மாங்காய்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள். தேங்காயை துருவிக்கொண்டு, காற்று புகாத டப்பாவில் ப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் துண்டுகளை பிரிட்ஜில் வைக்கலாம். பழுக்காத பச்சை மாம்பழங்கள் இருந்தாலும், பிரிட்ஜில் வைக்க வேண்டாம்.. மாம்பழங்கள் பழுக்காமல் போய், ருசியும் குறைந்துவிடும்.

பிரிட்ஜில் ஒரே அடுக்கிலோ அல்லது ஒரே கூடையிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்கக் கூடாது. அது நல்லதும் அல்ல என்பதை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் எப்போதும் காய்கள் மற்றும் பழங்களை வாங்கினாலும் அதனை தனித் தனி கூடைகளில் அடுக்கி வைத்தே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், காய்கள் மற்றும் பழங்களில் இருந்து வெவ்வேறு விதமான வாயுக்களே வெளியாகும். எனவே, அவற்றை ஒன்றாக சேமித்து வைப்பதன் மூலம் காய் அல்லது பழங்களின் சுவை மற்றும் தரம் பாதிக்கப்படும். அதனால் தான் இரண்டையும் தனித் தனியாக சேமித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like