1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் தெரியுமா ? தர்பூசணி சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட பால் சாப்பிடக்கூடாது..!

1

தர்பூசணி சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் ஏன் தெரியுமா ?

தர்பூசணியில் ஏற்கனவே ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. அதற்கு மேல் அதிக தண்ணீர் உட்கொள்வது வயிற்றில் உள்ள செரிமான சாற்றை கூட கரைத்து வீக்கத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின் படி, இது வழக்கமான செரிமான செயல்முறையை சீர்குலைக்கும் மற்றும் உடலில் உள்ள சக்கரங்களின் சமநிலையை கூட சீர்குலைக்கும். சிலர் தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்த பிறகு கூட அசௌகரியமாக உணரலாம். செரிமான செயல்முறையை தாமதப்படுத்துவதால், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதற்குப் பின்னால் சரியான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், தர்பூசணி சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்கள், தர்பூசணியை உட்கொண்ட பிறகு குறைந்தது 40-45 நிமிடங்களுக்கு தண்ணீர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள், தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது 20-30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், நீங்கள் ஒரு சிப் அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், தர்பூசணி சாப்பிட்டப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை முழுவதுமாக குடிக்க வேண்டாம். இது உங்களுக்கு வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட பால் சாப்பிடக்கூடாது.  தர்பூசணியில் வைட்டமின் சி இருப்பதால், அது பால் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலில் வீக்கம் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் செரிமானம் மற்றும் அஜீரண பிரச்சனை ஏற்படும்.

தர்பூசணி சாப்பிடும் போது அதிக புரத உணவுகளை தவிர்க்கவும் என  மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், தர்பூசணியில் சிறிய அளவு மாவுச்சத்தும். எனவே, புரதம் நிறைந்த பொருட்கள் செரிமான அமைப்பை பாதிக்கும்.

முட்டை மற்றும் தர்பூசணி இரண்டும் வெவ்வேறு விளைவுகளைக் கொண்டுள்ளன. முட்டையில் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் உள்ளன, தர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது. இந்த இரண்டு கலவைகளும் சேர்ந்து வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

தர்பூசணியை சாப்பிட்ட அதன் பிறகு அல்லது அதனுடன் சேர்த்து உப்பு சேர்த்து சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இப்படி செய்வதால், தர்பூசணியின் சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படாமல் இருப்பதோடு,  இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.

Trending News

Latest News

You May Like