ஏன் தெரியுமா..? வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள்..!
வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
உடல் நலம் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றால் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள், காலை உடற்பயிற்சி செய்யும் முன்பாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
செரிமான பிரச்சனை இருந்தாலும் தவிர்க்கலாம். செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் இரவில் இதை சாப்பிடக் கூடாது. இதைத் தொடர்ந்து சளி பிடிக்கும். ஆகவே பகல் நேரத்தில் வேண்டுமானால் சாப்பிடவும்
பால் உடன் சேர்த்து சாப்பிட கூடாது:
பொதுவாகவே வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது உடலின் அக்னியை பாதித்து, செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும். எனவே எப்போதும் வாழைப்பழங்களை தனித்தனியாக சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
முட்டை, கோழி, இறைச்சி சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாழைப்பழத்தை காலை மற்றும் மதியம் சாப்பிடலாம்.