1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் தெரியுமா ? நாவல் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது..!

1

கோடை சீசனில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் நாவல் பழமானது மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வு தரும் ஒன்றாக உள்ளது. நாவல் பழம் மட்டுமின்றி அதன் இலைகள் மற்றும் கொட்டைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயு சிக்கல் உள்ளிட்டவற்றுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக நாவல்பழம் கருதப்படுகிறது. நாவல் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் இங்கே…

நாவல்பழத்தில் இருக்கும் Astringent தன்மையானது சருமத்தை முகப்பருக்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் இருந்தால் நாவல்பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் இருக்கும்.

 ஏற்கனவே குறிப்பிடப்படி இந்த பழம் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு, இதில் உள்ள இரும்புச்சத்து பிளட்-ப்யூரிஃபையிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. நாவல்பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், இரும்புச்சத்து போன்ற பல மினரல்ஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி உள்ளிட்டவற்றின் பவர் ஹவுஸாக இருக்கிறது. இதனால் இந்த பழம் முன்கூட்டியே முதுமை ஏற்படுவதை தடுப்பதோடு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாவல் பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பது இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. 100 கிராம் நாவல் பழத்தில் சுமார் 55 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க உதவுகிறது. இந்த பழம் இதய தமனிகளை ஆரோக்கியமாக வைக்கிறது. இதய துடிப்பை சீராக பராமரிக்கிறது.

நாவல் பழத்தை சாப்பிடுவது ஈறுகள் மற்றும் பற்களை வலுவாக்குகிறது. இவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இந்த பழத்தின் இலைகளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. இதன் இலையை காய வைத்து பிறகு பவுடர் செய்து பற்பொடியாக பயன்படுத்தலாம். நாவல்பழ மரத்தின் பட்டையில் அஸ்ட்ரிஜென்ட் குணங்கள் உள்ளன. எனவே நீங்கள் இந்த மரத்தின் பட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் கொண்டு உங்கள் வாயை கொப்பளிப்பது வாய் புண்களை குணப்படுத்தலாம்.

நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த நாவல் பழம் பெரிதும் கை கொடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல்பழம் சிறந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறிகளை இந்த பழம் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழம் லோ கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது. நேவ் இந்த பழம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இந்த மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகளை சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

நாவல் பழக் கொட்டடக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதில் உள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இதைவிட சிறந்த மருத்துவம் இல்லையென்று சொல்லலாம். நாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையையும் இந்த நாவல்பழம் செய்கிறது. மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட்டாகவும் இது செயல்படுகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது நாவல்பழக் கொட்டை.

நாவல் என்றாலே நீரிழிவு நோய்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் மிகச்சிறந்த வரப்பிரசாதம். இந்த பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.. அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறியை இந்த பழம் குணப்படுத்துகிறது.

நாவல் பழ ஜூஸில், சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.. சிறுநீரக கற்களை கரைப்பதிலும் இந்த பழத்துக்கு பெரும் பங்குண்டு.. அதேபோல மூல நோய் உள்ளவர்கள், தினமும் 2 அல்லது 3 நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், 3 மாதங்களிலேயே மூல நோய் குணமாகுமாம்.


நாவல் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் இது உடல்நல அபாயங்களை வேண்டி அழைப்பது போன்றது. நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அது வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யலாம். இதை சாப்பிட்டு 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.

நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. ஏனெனில் இதன் புளிப்பு சுவை அமிலத்தன்மையை அதிகரிக்கும். வயிற்று வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாவல் பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால் உணவு உண்ட பிறகு அதை எடுத்துகொள்வது தான் நல்லது.

நாவல் பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்க கூடாது. ஏனெனில் இது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. நாவல் பழம் சாப்பிட்ட 1 மணி நேரம் வரை பால், பால் கலந்த திரவங்கள் என்று எதையும் குடிக்க கூடாது.

நாவல் பழம் சாப்பிட்ட உடனே மஞ்சள் சேர்த்த உணவை தவிர்க்க வேண்டும். நாவல் பழமும் மஞ்சளும் இணைந்து வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். இது உடலில் வினைபுரிந்து எரிச்சலை உண்டு செய்யும். அதனால் நாவல் பழம் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் கலந்த எந்த உணவையும் தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like