நீரில் எந்த பொருளைச் சேர்த்துக் குடித்தால் உடல் சுத்தமாகும் தெரியுமா ?
உடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்ற பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பது, மற்றொன்று குடிக்கும் நீரில் உடலை சுத்தப்படுத்தும் சில பொருட்களை சேர்த்துக் குடிப்பது.
இப்போது நாம் பார்க்கப் போவது குடிக்கும் நீரில் எந்த பொருளைச் சேர்த்துக் குடித்தால் உடல் சுத்தமாகும் என்பது பற்றி தான். அந்த பொருட்கள் உடலைச் சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும். சரி, இப்போது அவற்றைப் பற்றி விரிவாக காணலாம்......
உடலில் உள்ள அழுக்குகள் வெளியேற குடிக்கும் நீரில் இவற்றைக் கலந்து குடியுங்கள்....
எலுமிச்சை
குடிக்கும் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும், வாய் துர்நாற்றம் நீங்கும், சருமம் பொலிவாகும் மற்றும் உடல் எடையும் குறையும்.
இஞ்சி
இஞ்சியில் வைட்டமின்கள் மற்றும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே நீரில் இஞ்சியைத் தட்டிவப் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் ஏற்படும் கோளாறுகள் குறையும்.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் ஏராளமாக உள்ளது. அத்தகைய மஞ்சள் பொடியை குடிக்கும் நீரில் கலந்து குடித்து வந்தால், உடலினுள் உள்ள கிருமிகள் அனைத்தும் அழித்து வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
மிளகு
மிளகில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால், அதனை நீரில் போட்டு கொதிக்க விட்டு, தேன் கலந்து குடித்து வர, கல்லீரல், நுரையீரல் போன்றவை சுத்தமாகும். மேலும் மிளகில் கேப்சைசின் இருப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
க்ரீன் டீ
சுடுநீரில் க்ரீன் டீ பையை சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேன் கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும் மற்றும் உடல் எடையும் குறையும். அதுமட்டுமின்றி, க்ரீன் டீ எலும்புகளின் ஆரோக்கியம், வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சாற்றினைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகரில் நொதிகள், கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. மேலும் இது உடலை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்று. அதுமட்டுமின்றி, இது பற்களில் உள்ள கறைகளைப் போக்கி, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே 1 டம்ளர் நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் சுத்தமாகி ஆரோக்கியமாகவும் இருக்கும்.