அருகம்புல் குடிச்சா உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா?
நல்ல தளிர் அருகம்புல்லை பறித்து சுத்தமான நீரில் அலசி மைய அரைத்து, பசும்பாலில் அரைத்த விழுதை சேர்த்து சுண்டக்காய்ச்சி தினமும் படுக்கும் முன் குடித்துவந்தால் உடல் பலவீனமுள்ளவர்கள் விரைவில் நல்ல பலன் அடைவர்.

இன்சுலினை கட்டுக்குள் வைக்கிறது:-
இயற்கையாக கிடைக்கும் அருகம்புல் செயல் இழந்த உடல் உறுப்புகளை சிறுக சிறுக எல்லா சுரப்பிகளையும் இயற்கையாக செயல்பட வைத்து இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
எப்படி குடிப்பது:
காலையில் அருகம்புல் ஒரு கட்டு எடுத்து, விரல் நீள இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்த அருகம்புல்லுடன் வேண்டிய நீர் விட்டு சாறுபிழிந்து தேன் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக ருசித்து பருகலாம். இது காரமானது கசப்பு தன்மையுடையது என்பதால் தேன் சேர்க்கலாம்.
சுவை எப்படி:
முதலில் இதன் சுவை பிடிக்காவிட்டாலும் உடலுக்கு தரும் ஆரோக்கியத்தை நினைத்தால் தவிர்க்காமல் குடித்துவிடுவீர்கள்.
பலவீனமான உடலுக்கு:
நல்ல தளிர் அருகம்புல்லை பறித்து சுத்தமான நீரில் அலசி மைய அரைத்து, பசும்பாலில் அரைத்த விழுதை சேர்த்து சுண்டக்காய்ச்சி தினமும் படுக்கும் முன் குடித்துவந்தால் உடல் பலவீனமுள்ளவர்கள் விரைவில் நல்ல பலன் அடைவர்.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா:
தாரளமாக கொடுக்கலாம். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தை கள் வளரும் போதே போதிய ஊட்டசத்துடன் ஆரோக்யமாக வளர்வார்கள். விழுதாக அரைக்கவில்லையென்றாலும் சுத்தம் செய்த அருகம் புல்லை நீரில் காய்ச்சி வடிகட்டி மிதமான சூட்டில் அச்சாறை பருகி வந்தால் இதயம் வலுப் பெறும். உடல் ஆரோக்யமும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை போக்கும்.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும். உடலில் வரக்கூடிய 80% நோய்களைத் தவிர்க்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. இனி அருகம்புல்லை எங்க பார்த்தாலும் இரண்டு கட்டு வாங்குங்க..
newstm.in