இதன் அர்த்தம் என்ன தெரியுமா ? எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்..!
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது.
பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.
பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம்.
புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம். சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில் நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணர வேண்டாமா?
சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய்,மலட்டுத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
வாழை இலை சத்துக்கள் நாம் சாப்பிடும் வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?
உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது.நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.
வாழை இலை சாலட்
வாழை இலையை சாப்பிடும் தட்டாக மட்டுமல்ல, சாலட் அல்லது டீ செய்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ் சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 - 15 மி.லி., தினமும் 2- 3 வேளை சாப்பிட தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.தயிர்சாதம், லெமன் சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்குமே என்ற பயமா? இனி வேண்டாம். தயிர்சாதம் அல்லத லெமன் சாதத்தை அப்படியே சூடாக இலையில் போட்டு சாப்பிடுங்கள். இலையின் குளோரோபில் சூடான சாதத்தில் உருகி, உங்களின் தொண்டையில் தோன்றும் ஒவ்வாமையை தடுத்து விடும்.
வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன. தினமும் 1 வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனை வைத்து உணவின் விஷத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆகையால்தான் 'எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்' என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாத்திரங்களை கழுவ உதவும் காஸ்டிக் சோடா, சுண்ணாம்பு ஆகியவை பாத்திரங்கிளில் ஒட்டி நமது உணவுடன் உள்ளே சென்று வயிற்றுப்புண்களை உண்டாக்குகிறது. ஆனால் வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை.எப்படி பரிமாறுவது வாழையிலையில் சாப்பிட்டால் சுக போக உணர்ச்சியும், தோலுக்கு பளபளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவு உண்ண அமரவேண்டிய இடத்தை துடைத்து, லேசாக நீர் தெளித்து, அந்த தரையின் மேல் நுனி இலை உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்கும் படி நீரால் கழுவி சுத்தம் செய்த இலையை விரிக்க வேண்டும். இலையை விரித்த பிறகு அதன் மேல் கொஞ்சம் நீரை வலது கையால் தெளித்து, துடைத்து ஒரு சொட்டு நெய்யை இலையில் விட்டு, அதன் மேல் உணவு பதார்த்தங்களை பரிமாற வேண்டும்.
உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் போது மேற்கு பார்த்தும், சாதுக்கள், ஞானிகளுக்கு வடக்கு பார்த்தும், அவர்கள் அமர்ந்து உண்ணும் படி இலை விரிக்க வேண்டும்.முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், ஆகியவற்றை பரிமாறி, அதன் அருகில் மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு ரசம் மற்றும் குழம்பு வைத்து பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.வாழை இலையில் உணவு உண்பதால் நீர் சேமிக்கப்படும். வீரியமான வேதி பொருட்களால் உருவாக்கப்பட்ட உலோக, பிளாஸ்டிக் பாத்திரங்களின் நச்சுத்தன்மை நம்மை தாக்காது. அது மட்டுமல்ல நமது இலை நமது வீட்டு ஆடு, மாடுகளுக்கு ஆரோக்கியமான உணவளிக்கும் சாதனம் மட்டுமல்ல, நமது மண்ணின் மரபு. நமது பாரம்பரியத்தின் அடையாளம். நமது சந்ததியினருக்கும் இதனை அடையாளம் காட்ட தினம் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உட்கொள்வோம்.
வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்.
அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம் வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை உதவுகிறது.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.
சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம் பட்ட இடங்களில் பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.
பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து 2- 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும்.
கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.