வாழைப்பழத்தில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா..?
இது என்ன கேள்வி? நன்றாக சாப்பிடலாம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாது புற அழகுக்கும் பயன்படுத்தலாம். உங்கள் லெதர் பொருட்கள் மிகவும் பழையது போன்று தோற்றமளிக்கிறதா?
வாழைப்பழ தோல் கொண்டு அவற்றைத் தேயுங்கள். புதிது போல் மாறிவிடும். அதேபோல் உங்கள் தலைமுடி உறுதியாகவும் பளபளப்பாக இருக்கவும் சில யோசனைகள்:
- 2 வாழைப்பழ துண்டுகள் , ஒரு டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து அதனை தலை முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் முடி வலிமை பெறும்.
- ஒரு வாழைப்பழத் துண்டுடன் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து, தலையில் தடவிக்கொள்ளவும். 20 நிமிடங்களில் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இதனால் தலைமுடி வலுப்பெறுவதுடன், மென்மையாக இருக்கும்.
- ஒரு வாழைப்பழத் துண்டுடன், 5 சிறிய துண்டுகள் பப்பாளி மற்றும் 2 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து தலையில் தடவி, சில நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இதனாலும் முடி வலுப்பெறும்.
- ஒரு துண்டு வாழைப்பழத்துடன், 4 டேபிள் ஸ்பூன் தயிர், மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தலையில் தடவிக் கொள்ளவும். 30 நிமிடங்கள் கழித்து சாம்புவினைக்கொண்டு குளிக்கவும். இதனால் பொடுகு வராமல் தடுக்கலாம்.
- வாழைப்பழத்துண்டுகள் 2, ஒரு முட்டை, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவைற்றை கலந்து தலை முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும்.
அடடே! அதெல்லாம் சரி! எந்த வாழைப்பழம் வாங்குவது என்று கேட்காதீர்கள்.எந்தப் பழம் கிடைத்தாலும், அவற்றின் நற்குணங்கள் தலைமுடிக்கு கண்டிப்பாக சேரும்.
newstm.in