1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இனி தலைமுடி வளர்ச்சிக்கு காபி பயன்படுத்தலாம்..!

1

முடி வளர்ச்சிக்கு செயற்கையான பொருள்களை பலவும் வாங்கி மாற்றி மாற்றி பயன்படுத்துகிறோம். இவை எல்லாம் தற்காலிக தீர்வு தான். ஆனால் இயற்கையாகவே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க நம் சமையலறையிலேயே பல பொருள்கள் கொட்டி கிடக்கிறது.

அப்படியான ஒன்று காபித்தூள். காபி முடி சேதத்தை தடுக்க செய்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. காபி கூந்தலுக்கு செய்யும் அற்புதமான நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அசாதாரண முடி உதிர்தல் மற்றும் சேதமடைந்த மயிர்க்கால்களுக்கு முக்கிய காரணம் Dihydrotestosterone (DHT) இந்த டி.ஹெச்.டி. இதன் விளைவுகளை குறைத்து தலைமுடிக்கு சேதம் ஏற்படுவதை காபி தடுக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கிறது.

பலவீனமான மயிர்க்கால்கள் அசாதாரண முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி வளர்ச்சிக்கு முடியின் மயிர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மயிர்க்கால்கள் பலவீனமாக இருக்கும் போது அது அசாதாரணமான முடி உதிர்தலை உண்டாக்க செய்யும். அதிகமான முடி உதிர்தல் வழுக்கையை உண்டாக்கும்.

முடி உதிர்தலை எதிர்த்து போராடி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க காபி உதவும். இது முடியை அடர்த்தியாகவும், வலிமையகவும் மாற்றும். மயிர்க்கால்களை தூண்டுவதற்கு காபி உதவுகிறது. இது முடி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க செய்யும்.

தலைமுடிக்கு காபி பயன்படுத்துவது உச்சந்தலை சருமத்தின் உள் வரை சென்று பலப்படுத்தும். இது முடியை மென்மையாக வைத்திருக்க செய்யும். உலர்வான வறண்ட சேதமடைந்த முடிக்கு சிகிசையளிக்க காபி பயனுள்ளதாக இருக்கும். முடி எப்படி இருந்தாலும் அதன் ஆரோக்கியம் சீராக இருக்க காபி உதவுகிறது.

உச்சந்தலையில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் அது முடி வளர்ச்சியை மேம்படுத்த செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக இருந்தால் முடி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். உச்சந்தலையில் முழுமையாக காபி பயன்படுத்தும் போது அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சீரான இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

உச்சந்தலையில் படிந்திருக்கும் அழுக்கு, தூசு போன்றவை அட்டை போல் ஒட்டி பிசுபிசுப்பை உண்டாக்க செய்யும். இது பொடுகு மற்றும் முடி உதிர்தலை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் எண்ணெய்ப்பசை அதிகமாக இருந்தால் அப்போது காபி ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்.

தலைமுடியுடன் காபி ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது உச்சந்தலையை கழுவுவதற்கும், சுத்தமாக வைப்பதற்கும், புதியதாக வைக்கவும் உதவும். மேலும் உச்சந்தலையில் இறந்த சரும செல்களை அகற்றவும் காபி ஹேர் மாஸ்க் உதவும். இது மயிர்க்கால்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடியின் வேர்களை வலுப்படுத்த செய்கிறது.

காபி இயற்கையாகவே முடி நிறத்தை மேம்படுத்துகிறது. தலைமுடியின் நிறம் கருமையாக்க காபி எளிமையான சிகிச்சை. ரசாயனம் கலக்காத பயனுள்ள கைவைத்தியம் மூலம் இதை செய்துவிட முடியும்.

கருப்பு அல்லது பழுப்பு நிற முடி இருந்தால் தலைமுடியின் நிறத்தை அதிகரிக்க காபி சரியான தீர்வாக இருக்கும். நரைமுடிக்கு காபி சரியான தீர்வில்லை என்றாலும் இது பழுப்பு மற்றும் செம்பட்டை முடிக்கு தீர்வளிக்கும்.

Trending News

Latest News

You May Like