1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பெண்கள் கழுத்தில் அணியும் மஞ்சள் கயிறு புற்று நோயை விரட்டுமாம்..!

1

தாலி கட்டுவதே அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவே...இதற்காக மஞ்சள் தாலிதான் போட வேண்டுமா? தங்கத்தில் தாலி போடக்கூடதா? என்பது பலரின் அசட்டுத்தனமான கருத்தாக உள்ளது..அதிலும் தங்களது அந்தஸ்தை காட்டுவதற்காகவே சிலர் 5 லிருந்து 10 பவுன் வரை தங்க சங்கலியில் தாலி அணிகின்றனர்..

இந்த எண்ணம்  பெண்களை  புற்று நோய் என்னும் மரண வாயிலுக்கு அழைத்து செல்கிறது  என்று சொன்னால் நம்புவிர்களா? ஆமாங்க...இதனை ஆராய்ச்சியாளர்களே ஏற்று கொள்கின்றனர். அது எப்படி மஞ்சள் கயிறு புற்று நோயை தவிர்க்கும்?  வாங்க பார்க்கலாம்...
 
மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்திருந்தால்  தினமும் குளிக்கும் போது மாங்கல்யத்திற்கும் மஞ்சள் பூசி குளித்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் கயிற்றின் கலர் மாறிவிடும்.. அவ்வாறு மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு  அழகும் கூடும்,நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மார்பக புற்று நோயை விரட்டும் மஞ்சள் தாலி;

 மார்பகம், பெருங்குடல், கணையம், இரைப்பை, கல்லீரல், ரத்தம், நுரையீரல், புராஸ்டேட், சிறுநீர்ப் பை, கருப்பை வாய், கருப்பை, தலை மற்றும் கழுத்து, மூளை எனப் பல புற்றுநோய் பாதிப்பிலிருந்து மஞ்சள் நம்மை பாதுகாக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள்  கூறுகின்றன.

மேலும் 'மஞ்சளின் மூலப்பொருளான கர்கியுமினுக்கு' நோய் எதிர்ப்பு, அழற்சி தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, ஆண்டிமியூடாஜெனிக் ஆகிய பண்புகள் உள்ளன. கர்கியுமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மார்பக புற்று நோயை விரட்டும் மஞ்சள் தாலி;
கர்ப்பம் தரித்த  பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள்  வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால்,  தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுகிறது. இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்"சாக செயல்படுகிறது. 

மார்பக புற்று நோயை விரட்டும் மஞ்சள் தாலி;

இத்தகைய அருமருந்தை தினமும் நம் உடலில் பூசுவது சாத்தியமா?  கயிற்றின் கலர் மாறமல் இருப்பதற்காக,  நாம் மஞ்சளை தினமும் பூசியே ஆக வேண்டும்.. இவ்வாறு தொடர்ந்து மஞ்சளை பூசி வருவதனால் புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய்களை தவிர்க்க முடியும். 

மூட நம்பிக்கை எனக் கூறி மஞ்சளை  தூக்கி எறிந்து விட்டு ..விலை உயர்ந்த சங்கிலியை தாலியாக அணிவதற்கு பெயர்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது... 

Trending News

Latest News

You May Like