இது தெரியுமா ? சிரித்தால் மன அழுத்தம் நீங்கி விடுமா..!
மன அழுத்தம் என்பது நம்மைச் சுற்றியுள்ள நபர்களால் நடைபெறும் ஒரு சிறு நிகழ்வு அவ்வளவுதான் இதைத்தான் நாம் மனவுளைச்சல் என்கிறோம்.
டேக் இட் ஈசி பாலிசி…….
அவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாகத்தாய்யா…….! இருக்கும்….! என்ற வடிவேலுவின் வாய்மொழி போன்றவற்றால் மன அழுத்தத்தை மிக எளிதாக போக்கலாம்
மேலும் ஆனந்தத்தைப் போக்கும் மனநிலையும் ஆற்றலும் நம்மிடையேதான் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொழுதுபோக்குகளை செய்யலாம் பொழுதுபோக்குகள் பலவகைப்படும்
நமக்கு தெரிந்ததெல்லாம் டிவி பார்ப்பது மொபைல் போனில் மூழ்குவது இவைதான் இதனைவிட நீச்சல் அடித்தல் மரம் செடி வளர்த்தல் இசைக்கருவி மீட்டுதல் பாடல் பாடுதல் ஓவியம் வரைதல் நாணயம் தபால்தலை போன்ற பழைய விஷயங்களை சேகரித்து என சொல்லிக்கொண்டே செல்லலாம்மற்றவரிடம் அன்பாக நாலு வார்த்தை பேசுவது கூட இந்த வரிசையில் அடங்கும் எனவே அன்பை பகிர்வோம்
இவையாவும் சில பேருக்கு புரிவதில்லை
மன அழுத்தமாக உணரும் நேரத்தில் பிடித்தமான இசையை பாடல் போன்றவற்றை கேட்டு நடனமாடினால் அனைத்தும் பறந்து போகும் வேண்டுமென்றால் நீங்கள் சாதாரணமாக இருக்கும் ஒரு பொழுதில் கூட செய்து பாருங்கள் அது உங்கள் மனதை மகிழ்ச்சி அடையச் செய்து உங்களை வானில் பறக்க வைக்கும்.
எந்த விலங்கினமும் சிரிப்பது இல்லை. சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த கொடை. போட்டி, பொறாமை, பணிச்சுமை, கடன், நோய் என்று சுற்றிச்சுழலும் பிரச்சினைகளால் மனிதர்கள் பலருக்கு சிரிப்பு என்பதே மறந்து போய் விட்டது. சிரிக்கக் கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்