1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மலை நெல்லிக்காயை ஜூஸ் போடும் போது அத்துடன் இஞ்சியை சேர்த்து தேன் கலந்து குடித்தால்...

1

சாதாரண நெல்லிக்காயை விட அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது மலை நெல்லிக்காய். இதனை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். மேலும் மலை நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின்களான கரோட்டீன்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.

இங்கு மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இனிமேல் மலை நெல்லிக்காயை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

சரும செல்களை பாதுகாக்கும் :-

மலை நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சரும புற்றுநோய் வருவதும் தடுக்கப்படும்.

கொழுப்பைக் குறைக்கிறது
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு நெல்லிக்காய் நிச்சயம் பலன் தரும்.

சிறுநீரகம்
இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த சிறுநீர் பெருக்கியாக நெல்லிச்சாறு செயல்படுகிறது. அதிகப்படியான நீர்ச்சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனி சிறுநீரகத்தில் படியும் சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது.தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது.

எலும்புகள்
இன்று கால்சியம் பற்றாக்குறையால் தான் குறைந்த வயதிலேயே மூட்டுவலி உண்டாகிறது. இந்த கால்சி யத்தை நிறைவு செய்யும் வகையில் நெல்லிக்கனியில் இருக்கும் கால்சியம் சத்துகள் செயல்படுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்துவந்தால் உறுதியான எலும்பை பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

இதய நோயைத் தடுக்கும் :-

மலை நெல்லிக்காய் இரத்த கொலஸ்ட்ராலின் அளவை சீராக பராமரிக்கும். அதிலும் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து, அடைப்பை ஏற்படுத்தி, அதனால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் :-

மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்பட்டு, இன்சுலினை சரியான அளவில் சுரக்க உதவும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இளமையைத் தக்க வைக்கும் :-

மலை நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவை கொலாஜென் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, வைட்டமின் ஏ சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும். அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் :-

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, தினமும் மலை நெல்லிக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், பாலுணர்வு அதிகரிப்பதோடு, ஆண்களின் விந்தணு உற்பத்தியும், தரமும் அதிகரிக்கும்.

புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் :-

மலை நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்திருப்பதால், இவை உடலில் கார்சினோஜெனிக் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்த்துப் போராடும். மேலும் மலை நெல்லிக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும்.

வயிற்று உப்புசம் :-

மலை நெல்லிக்காயில் நார்ச்சத்து, பாலிஃபீனால் மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, நோயெதிர்ப்பு அழற்சியும் அதிகம் உள்ளது. இதனால் இவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் மலை நெல்லிக்காயை ஜூஸ் செய்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்று உப்புசத்துடன், அசிடிட்டி பிரச்சனையும் சேர்ந்து குணமாகும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண்
உண்ணும் உணவுதான் பெரும்பாலான நோய்களுக்கு மூலகாரணமாக இருக்கிறது. அப்படி ஆரோக்கியமான உணவை தேடி எடுத்துகொண்டாலும் முழுமையான சத்துகளைப் பெறுகிறோமா என்பதும் கேள்விக்குரியாக இருக்கிறது.அதே நேரம் தினமும் துரித உணவுகள், அரை வேக்காட்டு உணவுகள், இராசயனம் கலந்த குளிர்பானங்கள் போன்றவை வயிற்றில் அலர்ஜியை உண்டாக்கி புண்களை உண்டாக்கும். இந்த வயிற்றுப்புண்ணின் வெளிப் பாடு வாய்ப்புண்ணில் கொண்டு வந்து விடும்.வாய்ப்புண்ணால் அவதிப்படும்போது நெல்லி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்பகுதியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும். நெல்லிச்சாறை வாய்ப் புண்ணில் படும்படி நன்றாக கொப்புளித்து பிறகு குடித்துவந்தால் வாய்ப்புண் மட்டுமல்லாமல் வயிற்றுப்புண் ணும் குறையும். பல் ஈறுகள் வலுப்பெறும்.

தொண்டை புண் மற்றும் இருமல் :-

மலை நெல்லிக்காயை ஜூஸ் போடும் போது, அத்துடன் சிறிது இஞ்சியை சேர்த்து, தேன் கலந்து குடித்தால், தொண்டைப் புண் மற்றும் இருமல் உடனே குணமாகும். மேலும் இந்த ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வாயில் தங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றி, நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

கல்லீரலை பாதுகாக்கும் :-

தினம் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கெமிக்கல் மற்றும் ஆல்கஹால் மூலம் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். எனவே இரவில் ஆல்கஹால் அருந்தினால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் ஆல்கஹால் குடிப்பதால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, ஹேங் ஓவர் பிரச்சனையும் நீங்கும்

Trending News

Latest News

You May Like