1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சர்க்கரை ஸ்க்ரப் என்றால் என்ன... எவ்வாறு இது நம் சருமத்திற்கு பயன்படுகிறது..?

1

நாள்தோறும் சருமத்தில் செல்கள் உருவாவது, இறப்பதும் சாதாரண விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும். அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறும்.

இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும். இந்த சர்க்கரை ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை: சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 2 சொட்டு, எலுமிச்சை சாறு - 2 சொட்டு.

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும் 

க்ரீன் டீ மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

க்ரீன் டீ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனை முகத்தில் தடவுவது புத்துணர்ச்சி உணர்வை தருவதோடு முகப்பருவை குறைக்கவும் உதவும். ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளை எடுத்து ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அடர்த்தியான நிலைத்தன்மை அடைய சில துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி சிறிது நேரம் விடவும். பிறகு முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த சருமத்தை அகற்ற விரல் நுனியில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும்.

ஓட்ஸ் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு உள்ளவர்களுக்கு மற்றொரு அற்புதமான மூலப்பொருள் ஓட்ஸ். இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது.ஒரு டீஸ்பூன் ஓட்ஸை எடுத்து ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதை பேஸ்டாக மாற்ற ஆலிவ் எண்ணெய் அல்லது தேன் சேர்க்கவும். ஃபேஸ் பேக் போல் முகம் முழுவதும் தடவி உலர விடவும். கழுவும் போது மென்மையாக ஸ்க்ரப் செய்து முகத்தில் காயம்படாமல் பார்த்துகொள்ளவும்.

மஞ்சள் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

மஞ்சள் என்பது சருமத்துக்கான மற்றொரு அதிசய பொருள். இது சரும நன்மைகள் நிறைந்தது. பழுப்பு நிறத்தை குறைக்கவும், முகப்பருவை எதிர்த்து போராடவும், கருவளையங்களை ஒளிர செய்யவும் மற்றும் இறந்த சருமத்தை அழிக்கவும் உதவுகிறது.ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து முகத்தில் உள்ள மஞ்சள் நிறம் போக வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் எளிதானது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் மீது ஒரு டீஸ்பூன் சர்க்கரையை தூவி முகம் முழுவதும் மென்மையாக தேய்க்கவும். கடுமையான சர்க்கரை உங்கள் சருமத்தை காயப்படுத்திவிடும் என்பதால் மெதுவாக செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி முகத்துக்கு மாய்சுரைசர் பயன்படுத்தவும்.

தயிர் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

தயிர் ஒரு இயற்கை மாய்சுரைசர் ஆகும். இது சுருக்கங்கள் மற்றும் முகப்பருவை குறைக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி தயிர் உடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சிறிது சிறிதாக கலந்து அதில் சில துளிகள் தேன் சேர்க்கவும். பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி உலர விடவும். வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

தேன் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

தேனை முகத்தில் தடவுவது சருமத்துளைகளை திறக்க உதவுகிறது. மேலும் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. தேன் ஒரு இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பருவை தடுக்க உதவுகிறது.ஒரு டீஸ்பூன் தேனை எடுத்து ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முகத்தில் தடவவும் பிறகு 20-30 நிமிடங்கள் உலர வைத்து தண்ணீரில் கழுவி விடவும்.

பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

பாதாம் எண்ணெய் முகத்தின் வீக்கத்தை குறைக்கவும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் ஓர் அற்புதமான மூலப்பொருள். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டும் கலக்கவும். சில துளிகள் தேனை சேர்க்கலாம்.
உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். முகத்தை மெதுவாக ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

இந்த ஸ்க்ரப் வகைகள் எல்லாமே சருமத்துக்கு பொலிவை அளிப்பவை. இதை பயன்படுத்தும் போது சருமத்தை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

Trending News

Latest News

You May Like