இது தெரியுமா ? வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஊற வைத்த நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
அத்திப்பழம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிடைக்கும் ஒரு சீசன் பழமாகும். இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்காவிட்டாலும், அதன் உலர்ந்த வடிவம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எந்த வடிவத்தில் இவற்றை உட்கொண்டாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.
இதில் அதிகப்படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும். உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இரத்த உற்பத்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வளர்ச்சியையும் தரும்.
இப்படிப்பட்ட அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடாமல், 2 அத்திப்பழத்தை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இருமடங்கு நன்மைகளைப் பெறலாம். இப்போது அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்:
அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அத்திப்பழத்துடன் அந்த நீரையும் குடிக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். பல்வேறு ஆய்வுகளில் அத்திப்பழத்தில் உள் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழ நீரை குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
மலச்சிக்கல் தடுக்கப்படும்:
கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பினால் அத்திப்பழ நீரைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழம் ஊற வைத்த நீருடன், அந்த பழத்தையும் உட்கொள்ளும் போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
எடை இழப்புக்கு உதவும்:
அத்திப்பழம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடல் எடையைக் குறைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் போதுமான அளவில் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
ரத்த அழுத்தம் குறையும்:
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அத்திப்பழ நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்:
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிகின்றன. ஒருவரது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்:
அத்திப்பழத்தில் உடலுறுப்புக்கள் செயல்பட தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் ஏரளமாக உள்ளன. அதுவும் ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும், மாதவிடாய் கால பிரச்சனைகளைத் தடுக்கவும் பெண்கள் அத்திப்பழ நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.
சரும ஆரோக்கியம் மேம்படும்:
அத்திப்பழ நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் திறம்பட மலத்தின் வழியாக வெளியேற்றுகிறது. உடலினுள் நச்சுக்கள் இல்லாவிட்டால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமம் அழகாகவும் பிரச்சனைகளின்றியும் இருக்கும்.