1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? எடை இழப்புக்கு சிறந்த பானம் தண்ணீர் தான்..!

1

கிரீன் டீயில் உள்ள காபின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில், அதிக எடை மற்றும் மிதமான உடல் பருமன் உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு 150 மில்லி கிராம் கிரீன் டீயை தினமும் உட்கொண்டனர். இதன் மூலம் உடலின் எடை கணிசமான அளவு குறைந்தது. அத்துடன் இடுப்பைச் சுற்றியுள்ள கூடுதல் கொழுப்பும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது.

கிரீன் டீயைப் போலவே, பிளாக் டீயிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குறிப்பாக, பிளாக் டீயில் உள்ள பாலிபினால்கள், உங்கள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. இதுகுறித்து 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில், பிளாக் டீயில் உள்ள பாலிபினால்கள் உடலில் உள்ள அதிகமான கொழுப்புகள் மற்றும் சர்க்கரையை உறிஞ்சி, எடை இழப்புக்கு உதவுகிறது என்று கண்டறியப்பட்டது. மேலும், மூன்று மாதங்களுக்கு தினமும் 3 கப் பிளாக் டீ அருந்துவோரின் எடை அதிகரிக்கும் அபாயம் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

எடை இழப்புக்கு சிறந்த பானம் தண்ணீர் தான். தண்ணீரில் கலோரிகள் இல்லை அத்துடன் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். அதோடு உங்களை நிறைவாக வைத்திருக்கச் செய்யும். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். நீங்கள் உங்கள் உடல் எடையின் அளவில் பாதி பவுண்ட்ஸ் அளவு தண்ணீரை தினமும் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக நீங்கள் 150 பவுண்ட்ஸ் எடையுள்ளவராக இருந்தால், நீங்கள் தினமும் குறைந்தது 2.2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக எடையுள்ள மற்றும் பருமனான உடலைக் கொண்டுள்ளோர் தினமும் எட்டு வாரங்களுக்கு இரண்டு முறை கெபிர் நிறைந்த பானங்களைக் குடித்தன் மூலம் அவர்களின் உடல் எடை மற்றும் இடுப்புச் சுற்றளவு கணிசமாக குறைந்தது 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

மோர், சோயா, முட்டையின் வெள்ளைக் கரு, பட்டாணியில் உள்ள புரதங்கள் அனைத்தும் எடை இழப்புக்கு உதவுகின்றன. இது போன்ற பொருட்கள் நிறைந்த புரோட்டீன் ஷேக்குகளை நீங்கள் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக உணர முடியும். இதுபோன்ற புரோட்டீன் ஷேக்குகள் ஜீரணிக்க அதிக ஆற்றலை உங்களில் உடலில் இருந்து எடுக்கும். இதனால் உங்கள் உடலில் இருந்து அதிக கலோரிகள் எரிக்கப்படும். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அதிக புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பின் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

காபி குடிப்பது நாள் முழுவதும் பசியின்மை மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. 2020-ல் நடத்தப்பட்ட பிளாக் காபி குறித்த ஆய்வில், 24 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு கப் பிளாக் காபி குடிப்பது 4 சதவீத கொழுப்பு குறைப்புடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக இதுபோன்ற எடை குறைப்பு பானங்களில் வெள்ளை சர்க்கரை போன்ற இனிப்புகளை சேர்க்கக் கூடாது. இதனால் எடை குறையாமல் போகும் வாய்ப்புள்ளது.

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், வளர் சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, பசியையும் அடக்கச் செய்கிறது. மேலும், நாம் உண்ணும் உணவின் ஜீரணத்தை மெதுவாக்கி, உங்களை நீண்ட நேரம் நிறைவாகவே உணரச் செய்யும். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் 1 முதல் 2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் தண்ணீரில் கலந்து தினமும் குடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களின் பசி தூண்டப்படுவதை தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

குறிப்பாக, டைப் 1 நீரிழிவு உள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசித்து விட்டு பின்பு பயன்படுத்துவது தான் நல்லது. ஏனெனில், இதனால் உங்களின் நிலைமையை மோசமாக்கும் வாய்ப்புள்ளது.

தவிர்க்க வேண்டிய பானங்கள்

ஆல்கஹால்

​சோடா

பிரெஷ் ஜூஸ்

Trending News

Latest News

You May Like