இது தெரியுமா ? தினமும் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் நடப்பதால்...
உடற்பயிற்சிகளிலே மிகவும் எளிதாக செய்யக்கூடிய பயிற்சி நடைபயிற்சிதான். இது மிகவும் சிறப்பான பயிற்சியும் கூட. நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் உடல் மற்றும் மனநிலையையும் மேம்படுத்துகிறது. நீங்கள் 15 நிமிடங்கள் தினமும் நடப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் 15 நிமிடங்கள் நடப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். மன அழுத்தம் குறைக்கும்.
நடைபயிற்சி உண்மையில் மனதுக்கு இனிமையான ஒன்று. நடக்கும் போது உடலில் உண்டாகும் செயல்முறைகள், அதிகரித்த இரத்த ஓட்டம், ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துதல், ஹார்மோன் வெளியீடு மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உட்பட ஒட்டுமொத்த மனநிலையையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
தினமும் 15 நிமிடங்கள் நடப்பது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது என்கிறது ஆய்வுகள். குறைந்த மனநிலையுடன் இருக்கும் போது வெளியே சென்று 15 நிமிடங்கள் நடப்பது உடனடி ஆற்றலை அளிக்க செய்யலாம்.
மோசமான நாளாக ஒன்றை நீங்கள் நினைத்தால் நீங்கள் வெளியே வந்து 15 நிமிடங்கள் நடப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்த செய்யும். இது மூளையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. இது செரோடோனின் மற்றும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது மகிழ்ச்சியை தரும் இராசயனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவை மன அழுத்தத்தையும் வலியையும் குறைக்கிறது.
நடைப்பயிற்சி, மூளை இயக்கத்தை அதிகரிப்பதோடு தொடர்பு கொண்டது. வழக்கமான நடைப்பயிற்சி, நினைவாற்றலை அதிகரிக்கிறது. உங்களுக்கு நினைவிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. குறைந்தது ஒரு நாளில் 15 நிமிடங்களாவது நீங்கள் வேகமாக நடக்கவேணடும். அது உங்களின் மூளையை கூர்மையாக்குகிறது. அல்சைமர்ஸ் நோய் என்ற மறதி நோயை தடுக்க உதவுகிறது.
எடை மேலாண்மை
உங்கள் உடல் எடையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நடைப்பயிற்சி உங்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். 15 நிமிடங்கள் நீங்கள் வேகமாக நடப்பது உங்களுக்கு கலோரிகளைக் குறைக்க உதவும். உடல் எடை அதிகரிப்பை தடுக்கும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி, நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் இதை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும்
ஒரு சிறிய நடைப்பயிற்சி உங்களின் ஆற்றலை அதிகரிக்கும். இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை தரும். உங்கள் தசைகள் மற்றும் மூளை இரண்டையும் காக்கும். உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். உங்களுக்கு சோர்வு உணர்வு ஏற்படுவதை தடுக்கும்.
தசை மற்றும் எலும்புகளை வலுவாக்கும்
நடைப்பயிற்சி, உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். வழக்கமாக நீங்கள் நடப்பது உங்களின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். அது உங்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும். இது தசைகள், கால்கள் மற்றும் கைகளில் உள்ள தசைகளை வலுவாக்கும்.
உறக்கத்தின் தரத்தை போக்குகிறது
உங்களுக்கு உறங்குவதில் சிரமம் இருந்தால், நடைப்பயிற்சி அதற்கு ஒரு தீர்வாகும். நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடங்கள் நீங்கள் வேகமாக நடப்பது தூக்கமின்மை வியாதிக்கு மருந்தாகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
மனஅழுத்தத்தை குறைக்க நடைப்பயிற்சி மிகச்சிறந்த வழியாகும். நடைப்பயிற்சி உக்ஙள் மனதை தெளிவாக்குகிறது. மேலும் புத்தம் புது காற்றை நீங்கள் சுவாசிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி உங்கள் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. கார்டிசால்தான் மனஅழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன் ஆகும். தினமும் நீங்கள் நடைப்பயிற்சி செய்வது உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
இளவயதில் வேகமான பயிற்சிகளின் மேல் ஆர்வம் கொண்டவர்கள் வேகமாக நடக்க ட்ரெட்மில் பயன்படுத்தலாம். மலைகளில் நடக்கலாம். இதனால் முழங்கால்கள், இடுப்பு, கணுக்கால் மற்றும் கீழ் உடல் தசைகளில் வலிமை மற்றும் நிலைத்தன்மை உருவாக்க செய்யும்.
தினசரி 15 நிமிடங்கள் நடப்பதால் கவனம் அதிகரிக்கிறது. உற்பத்திதிறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது என்கிறது ஆராய்ச்சி. குறிப்பாக வெளியில் நடப்பது காற்று மற்றும் சூரிய ஒளி போன்றவை உங்கள் அறிவாற்றை மேம்படுத்த செய்யும்.
நடைபயிற்சி செய்வது மூளைக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் ஆகும். மூளையில் இருந்து நமது படைப்பாற்றல் வெளியிடப்பட அறிவாற்றலை தூண்ட இந்த நடைபயிற்சி உதவும். மன அழுத்தமாகவோ சோர்வாகவோ சிக்கலாகவோ உணர்ந்தால் அதை தவிர்க்க நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் மூளையில் உள்ள நோர்பைன்ப்ரைன் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் உன்னிப்பான கவனம் செலுத்த முடியும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் பெண்கள் நீரிழிவு நோயின் அபாயத்தை 50% வரை குறைக்கிறார்கள். மேலும் நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வயிற்று கொழுப்பை குறைப்பதில் நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நடப்பதால் புதிய யோசனைகள் வருகிறதாம். அமர்ந்து யோசிப்பதை காட்டிலும் நடந்து கொண்டே யோசிப்பது மிகச்சிறந்தது. இனிமேல் உங்களுக்கு எதை பற்றியாவது யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றால், நடந்து கொண்டே யோசியுங்கள்...