இது தெரியுமா ? சோம்பல் நீங்கி, புது சக்தி பெற வீரபத்ராசனம்..!

வீரபத்ராசனம் வடமொழியில் 'வீர' என்பதற்கு 'போர்வீரன்' என்றும் 'பத்ர' என்பதற்கு 'சுபம்' மற்றும் 'துணை' என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள்.ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது.போர் வீரர்களுக்கான ஆசனம் என்று சொல்வார்கள்.
நேராக நின்ற நிலையில், இடது காலை முன்பக்கமாக நீட்டவும். வலது கால் பாதத்தை சற்று வெளிப் புறமாகத் திருப்பி, நேராக நிற்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்த படியே இரு கை களையும் முன்புறமாக மேலே கொ ண்டுசெல்ல வேண்டும். அதே நேரத் தில் முன்புறம் உள்ள காலை மடக்கி, இரு கைகளையும் பிணைத்து நன்றா க முதுகை வளைத்து ஓரிரு விநா டிகள் இருக்க வேண்டும்.
பிறகு, மூச் சை வெளியே விட்டுக் கொண்டே, கைகளைக் கீழே இறக்கியபடி, மடக்கிய முன் கால் முட்டியை நேராக்க வேண்டும். இதேபோல இரு காலுக்கும் சேர்த்து ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்:
மார்பு முழுப் பலம் பெறும். முதுகெலும்பு வலுப்படும். உடலுக்கு ஒட்டுமொத்த வலிமை கூடுவதால், சோம்பல் நீங்கி, புது சக்தி பெறுவதை உணர முடியும். அடிவயிறு நன்கு இழுக்கப்படுவதால், அந்தப் பகுதி நன்றாக வேலை செய்யும்.