1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தக்காளி மலச்சிக்கல், வயிற்றுபோக்கு பிரச்சனைகளை தடுக்கிறது

1

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும்  தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.

கண் பார்வை

தக்காளி வைட்டமின் ஏ சத்துக்களை கொண்டுள்ளதால் கண்பார்வையை மேம்படுத்துகிறது, மேலும் இரவு நேரங்களில் ஏற்படக்கூடிய கண் நோய்களான குருட்டுத்தன்மை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பை தடுக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.

புற்றுநோய்க்கு உதவுகிறது

ஆய்வுகளின் அடிப்படையில் தக்காளி நுரையீரல் புற்றுநோய், வயிறு, மற்றும் புரோஸ்டேட் போன்றவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான லைகோபீனை அதிக அளவில் கொண்டிருக்கிறது..

இரத்த பராமரிப்பு

ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சிறிய தக்காளி 40% வைட்டமின் சியை, வழங்குவதோடு மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் போன்றவற்றை அளித்து உடலுக்கு தேவையான இரத்தத்தை பராமரிக்கிறது. வைட்டமின் கே இரத்தபோக்கு, இரத்தம் உறைதல், ஆகியவற்றை சரி செய்து சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.

இதயநோய்

தக்காளியில் லைகோபீன் உள்ளதால் இருதயநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.. லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை தடுக்கும் தன்மை உடையது. தொடர்ந்து தக்காளி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு, ட்ரைகிளிசரைடு அளவை சுருக்கி, இரத்த நாளங்களின் கொழுப்பு படிவை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பு தருகிறது.. லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செரிமானம்

செரிமான அமைப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் தக்காளியை உண்வில் சேர்த்துக்கொள்ளவேண்டும். தக்காளி மலச்சிக்கல், வயிற்றுபோக்கு பிரச்சனைகளை தடுக்கிறது. இது மஞ்சள் காமாலைநோய் வராமல் தடுத்து, உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் பணிகளையும் செய்கிறது.

Trending News

Latest News

You May Like