1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற...

1

வாழைப்பழத் தோல்
வாழைப்பழத்தின் தோலில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்க வல்லவை. எனவே உங்கள் பற்களை வெண்மையாக்க, வாழைப்பழத்தை சாப்பிடுவதோடு, அதன் தோலைக் கொண்டு பற்களை மசாஜ் செய்யுங்கள்.

முத்து போன்ற வெண்மையான பற்களை விரும்பாதவர்கள் இல்லை. அவை வாய் ஆரோக்கியத்தின் அடையாளம் மட்டுமல்ல. உடல் தோற்றத்திற்கும் அழகு சேர்ப்பவை. இருப்பினும் பலர் பற்களில் வெண்மை நிறத்தை தக்க வைப்பதற்கு தடுமாறுகிறார்கள். வயது அதிகரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது இயல்பானதுதான்.

ஆனால் புகைபிடித்தல், மரபணுக்கள் ரீதியான பாதிப்பு, காபி, டீ போன்ற காபின் நிரம்பிய பானங்களை அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களாலும் பற்கள் நிறம் மாறக்கூடம். பற்களை மெருகூட்ட சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினாலே போதும்.

பழத்தோல்கள்:

எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற சில பழங்களின் தோல்களில் வைட்டமின் சி மற்றும் டி-லிமோனென் என்ற கலவை நிறைந்துள்ளது. இந்த இரண்டு சேர்மங்களும் பற்களை இயற்கையாகவே வெண்மையாக்கும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் டெண்டிஸ்ட்ரியில் வெளி யிடப்பட்ட ஆய்வில், பற்களின் கறைகளை நீக்குவதில் 5 சதவிகிதம் டி-லிமோனைன் கொண்ட பற்பசைகள் பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்குவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பற் பசையை கொண்டு தினமும் பல் துலக்கு பவர்களின் கறைகள் பெருமளவு குறைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.சிட்ரிக் அமிலம் கலந்த சாறு, பற்களை வெண்மையாக்கும் தன்மை கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. பழ தோல்கள் அமிலத்தன்மை கொண்டவை. மேலும் அதிக உணர்திறன் கொண்டவை என்பதால் கவனமாக கையாள வேண்டும்.

பெர்ரிப் பழங்கள்..
பெர்ரிப் பழங்களில் உள்ள அசிட்டிக் தன்மையால், அவற்றை உட்கொண்டால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளைப் போக்கலாம். அதிலும் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால், பற்களின் வெண்மை அதிகரிக்கும்.

சமையல் சோடா:

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்ற சமையல் சோடா சிறந்த தேர்வாக அமையும். அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்க உதவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாக்டீரியாவை எதிர்த்து போராடும். பிளேக்கை குறைக்கும்.

துளசி
துளசியை தினமும் சிறிது வாயில் போட்டு மென்று வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் உள்ள கறைகளும் அகலும்.

அன்னாசி
புளிப்பு சுவைக் கொண்ட அன்னாசி பழத்தில் உள்ள புரோமிலைன், பற்களில் உள்ள கறைகளை நீக்கும். எனவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால், அடிக்கடி அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள்.

ஆப்பிள்
பச்சை ஆப்பிளில் மாலிக் ஆசிட் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும். எனவே சிவப்பு ஆப்பிளை உட்கொள்வதை விட, பச்சை நிற ஆப்பிளை சாப்பிட்டால், பற்களை வெண்மையாகும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பற்களைத் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி மாதம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் கறைகளை தங்குவதைத் தடுக்கலாம்.

Trending News

Latest News

You May Like